Tamil Cinema News | சினிமா செய்திகள்
கடைசி ஆசை நிறைவேறாமல் உயிரை விட்ட நடிகர் முரளி.. தற்போது வெளிவந்த மறைந்த ரகசியம்
1984 ஆம் ஆண்டு வெளிவந்த பூவிலங்கு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் முன்னாள் நடிகர் முரளி. அதனைத் தொடர்ந்து தனது கடைசி படமான பானா காத்தாடி வரை கல்லூரி மாணவராக அதிக படங்களில் நடித்தவர். ஆனால் மக்களுக்கு நெகிழ்வான நடிப்பை வழங்கியவர்.
இந்நிலையில் தற்போது நடிகர் முரளியைப் பற்றி யாரும் அறிந்திராத ரகசியம் ஒன்று வெளியாகியுள்ளது. நடிகர் முரளி அம்மையார் ஜெயலலிதாவின் மேல் அதிக பற்றுகொண்டவர். இதன் காரணமாக 2006ம் ஆண்டு தன்னை அதிமுக அமைப்புடன் இணைத்துக் கொண்டார்.
2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் தேதி அறிவிக்கப்பட்ட போது அம்மையாரை ஆட்சியில் அமர வைக்க நான் எவ்வளவு வேணாலும் உழைக்கத் தயார் என்றும், கண்டிப்பாக ஜெயலலிதாவை முதல்வராக வேண்டும் என்ற தனது ஆசையை கூறியிருந்தார்.
ஆனால் 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ம் தேதி யாரும் எதிர்பாராத வகையில் மாரடைப்பால் பரிதாபமாக இறந்தார். இறக்கும் போது அவருக்கு வயது வெறும் 46 தான்.
அவர் ஆசைப்பட்டதைப் போலவே ஜெயலலிதா 2011-ம் ஆண்டு முதலமைச்சர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
