ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

சமந்தாவை விவாகரத்து செய்ய இந்த நடிகர் தான் காரணம்.. கூடவே இருந்து நாக சைதன்யாவை ஏமாற்றிய பிரபலம்

தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபலமாக இருக்கும் நடிகை சமந்தா சில வருடங்களுக்கு முன்பு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சிறந்த ஜோடிகளாக வலம் வந்த இவர்கள் கடந்த வருடம் கருத்து வேறுபாட்டின் காரணமாக விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்களின் ரசிகர்கள் இந்த முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கூறி வந்தனர். மேலும் எப்படியாவது அவர்கள் இணைந்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வரை அவர்கள் இருவரும் இணையவில்லை.

இந்நிலையில் இவர்களின் பிரிவுக்கு நடிகர் அமீர்கான் தான் காரணம் என்று பிரபல நடிகர் கே ஆர் கே அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். பாலிவுட்டில் சர்ச்சை நடிகராக இருக்கும் இவர் நடிகர்களை பற்றி ஏதாவது ஒரு கருத்தை தெரிவித்து வம்பில் சிக்கி கொள்வார்.

அந்த வகையில் அவர் தற்போது வெளியிட்டுள்ள ஒரு கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தன் சோசியல் மீடியா பக்கத்தில் சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் விவாகரத்துக்கு அமீர்கான் தான் காரணம் என்றும், அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அமீர்கான், நாக சைதன்யாவை இந்த விஷயத்தில் எப்படி எல்லாம் வற்புறுத்தினார் என்ற முழு கதையும் எனக்கு தெரியும் என்று கூறி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த விஷயம் தற்போது ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்வடையச் செய்துள்ளது.

நாக சைதன்யா இப்போது அமீர்கானுடன் இணைந்து ஒரு ஹிந்தி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இன்னும் சில நாட்களில் வெளியாக இருக்கும் அந்த படத்தின் பிரமோஷன் பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கே ஆர் கே தெரிவித்திருக்கும் இந்த கருத்து பல விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்த செய்தியை கேள்விப்பட்ட நாக சைதன்யாவின் ரசிகர்கள் விவாகரத்துக்கு அமீர்கான் தான் காரணம் என்று தெரியாமலேயே அவர் படத்தில் இவர் நடித்துள்ளதாக கூறி வருகின்றனர். ஆனால் இந்த சர்ச்சைக்குரிய கருத்து குறித்து சம்பந்தப்பட்டவர்கள் யாரும் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

- Advertisement -

Trending News