அஜித்தின் ஏகே 61 படத்தில் இணைந்த பிரபலம்.. இவரு அவரோட தீவிர ரசிகர் ஆச்சே

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருந்த வலிமை திரைப்படம் சமீபத்தில் வெளியானது. அஜித்தின் நடிப்பில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படம் வெளியானால் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது. இருப்பினும் படம் வெளியான பிறகு ஒரு சில எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தது.

அதன் பிறகு அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் ஏகே 61 திரைப்படத்தில் நடித்து வருகிறார். அஜித்தின் முந்தைய படங்களை தயாரித்த போனி கபூர் தான் இந்த படத்தையும் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே தனுஷ் உடன் அசுரன் திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த படம் குறித்து மேலும் ஒரு சுவாரசிய தகவல் வெளியாகி இருக்கிறது.

அதாவது இந்தத் திரைப்படத்தில் அஜித்தின் தீவிர ரசிகரான ஜான் கொக்கன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அஜித்தின் தீவிர ரசிகரான இவர் அவரைப் பற்றி பல முறை மிகவும் பெருமையாக பேசி இருக்கிறார்.

மேலும் இவர் அஜீத்துடன் வீரம் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். அந்த சமயத்தில் அஜித் இவருக்கு சினிமா சம்பந்தப்பட்ட ஏராளமான விஷயங்களை சொல்லி கொடுத்ததாகவும், அது தனக்கு மிகவும் உபயோகமாக இருந்ததாகவும் அவர் கூறியிருக்கிறார்.

இந்நிலையில் தான் இவர் வீரம் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது அஜித்துடன் மீண்டும் இணைந்து இருக்கிறார். இந்த படத்தில் அவருக்கு மிகவும் வலுவான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் இதைப் பற்றிய தகவல்களை படக்குழு சஸ்பென்சாக வைத்துள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்