Connect with us
Cinemapettai

Cinemapettai

Thiruvin-Kural-movie-Arulnithi

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வெறித்தனமாக வெளியான திருவின் குரல் ட்ரெய்லர்.. புத்தாண்டு ரேசில் குதித்த அருள்நிதி

அருள்நிதி நடித்திருக்கும் திருவின் குரல் படத்தின் வெறித்தனமான டிரைலர் தற்போது வெளியாகி ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கும் அருள்நிதி, இப்போது இயக்குனர் ஹரிஷ் பிரபு இயக்கத்தில் திருவின் குரல் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் வெறித்தனமான டிரைலர் தற்போது வெளியாகி சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடிகை ஆத்மிகா நடித்துள்ளார். இதில் முதல் முதலாக பாரதிராஜா உடன் இணைந்து அருள்நிதி தரமான சம்பவத்தை செய்திருக்கிறார். இதில் இயக்குனர் இமயம் பாரதிராஜா அருள்நிதிக்கு அப்பாவாக நடித்துள்ளார். இவர்களுடன் சுபத்ரா, மோனிகா சிவா, அஷ்ரப், ஏஆர் ஜீவா, சோமசுந்தரம், மகேந்திரன் மற்றும் முல்லையரசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Also Read: திறமை இருந்தும் பிரேக்கிங் பாயிண்ட் கிடைக்காமல் திணறும் அருள்நிதி.. ‘விக்டர்’ கேரக்டர் போல் கிடைத்திருக்கும் ஜாக்பாட்

மேலும் லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இதில் அருள்நிதி வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியாகவும் நடித்துள்ளார். அது மட்டுமல்ல பக்கத்தில் பேசினால் மட்டுமே அருள்நிதியால் கேட்க முடியும். தூரத்தில் பேசுவதை அவரால் கேட்க முடியாது. ரத்தம் தெறிக்க தெறிக்க ஆக்சன் காட்சிகள் நிறைந்துள்ள திருவின் குரல் ட்ரெய்லர், பார்ப்போரை பதைபதைக்க வைக்கிறது.

இந்த படத்தில் பிண அறையில் வேலை செய்யும் ஊழியர்கள் இருவர், தங்களை மருத்துவர்களை விட உயர்வாக நினைத்துக் கொண்டு மனித உயிர்களுடன் விளையாடுகிறார்கள். இதில் அருள்நிதியின் குடும்பமும் சிக்கி சின்னாபின்னமாகி இருக்கிறது. இதையெல்லாம் கண்டுபிடித்த அருள்நிதி அவர்களை எப்படி வெறிகொண்டு வேட்டையாடுகிறார் என்பதுதான் படத்தின் கதை.

Also Read: 2ம் பாகம் தான் எங்களுக்கு ஒரே வழி.. அருள்நிதி முதல் ஜெயம் ரவி வரை தவம் கிடக்கும் 5 ஹீரோக்களின் படங்கள்

ட்ரெய்லரே விறுவிறுப்பாக இருக்கும் போது நிச்சயம் படமும் சூப்பராக இருக்கும் என்று இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது. மேலும் இந்த படம் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டுக்கு ரிலீசாக உள்ளதாகவும் அந்த ட்ரெய்லரில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழ் புத்தாண்டு ரேசில் ஐஸ்வர்யா ராஜேஷின் ‘சொப்பன சுந்தரி’, சமந்தாவின் ‘சாகுந்தலம்’, பிரபாஸின் ‘சலார்’, இளமை எனும் பூங்காற்று போன்ற படங்கள் ரிலீஸ் ஆகுவதை தொடர்ந்து, அருள்நிதியின் திருவின் குரல் என்ற அதிரடி திரைப்படமும் வெளியாகிறது.

திருவின் குரல் ட்ரெய்லர் இதோ!

Also Read: சரியான ரூட்டை தேர்வு செய்த அருள்நிதி.. கொஞ்சம் மிஸ் ஆனாலும் போச்சு

Continue Reading
To Top