fbpx
Connect with us

தோழர் திருமுருகன் காந்தி வெளியிட்ட சத்யராஜ் நடிக்கும் புது பட தலைப்பு மற்றும் டைட்டில் போஸ்டர்.

News | செய்திகள்

தோழர் திருமுருகன் காந்தி வெளியிட்ட சத்யராஜ் நடிக்கும் புது பட தலைப்பு மற்றும் டைட்டில் போஸ்டர்.

கடந்த இரண்டு நாட்களாகவே சமூகவலைத்தளங்களில் ஆர்வமாக எதிர்பார்க்கப்பட்ட சினிமா நிகழ்வு. சத்யராஜின் அடுத்த பட தலைப்பை சமூக ஆர்வலர் திருமுருகன் காந்தி வெளியிடுவது என்ற அந்த அறிவிப்பு தான். படம் கமெர்ஷியல் வகையறா கிடையாது என்பது உண்ணிவரும் அறிந்ததே. எனினும் படத்தின் தலைப்பு மற்றும் ஜானர் என்ன வகையில் இருக்கும் என்பதே பலரின் எதிர்பார்ப்பு.

sathyaraj – Theerpukal Virkappadum

தீர்ப்புகள் விற்கப்படும்

இப்படத்தில் சத்தியராஜ் அவர்கள் மருத்துவராக நடிப்பதாக கிசு கிசுக்கப்படுகிறது. படத்தினை ஹனி பீ கிரேஷன்ஸ் சார்பில் சாஜிவ் மீராசாஹிப் தயாரிக்கிறார். படத்தினை தீரன் எழுதி இயக்குகிறார். சோஷியல் மெசேஜ் உள்ள இப்படம் விறு விறு ஆக்ஷன் த்ரில்லராகவும் இருக்கும் என இயக்குனர் கூறியுள்ளார். ஆஞ்சி ஒளிப்பதிவு, யாமிருக்க பயமேன் புகழ் பிரசாத் இசை. எடிட்டியாராக சரத் அறிமுக ஆகிறார்.

theerpukal virkappadum sathyaraj thirumurugan gandhi

நேற்று திருமுருகன் காந்தி பட தலைப்பு மற்றும் போஸ்டரை வெளியிட்டுள்ளார். விரைவில் மற்ற நடிகர் நடிகையர் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

theerpukal virkappadum sathyaraj thirumurugan gandhi

சிபிராஜும் படத்தில் நடிப்பதாக கிசு கிசுக்கிறார்கள், காத்திருப்போம் என்னவென்று தெரிந்துகொள்ள.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top