புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

வில்லன் கேரக்டருக்கு மெனக்கீடு செய்யும் திருச்செல்வம்.. கோலங்கள் ஆதி, எதிர்நீச்சல் குணசேகரன் பார்ட் 2 யாரு?

Ethirneechal 2: திருச்செல்வம் என்று சொல்வதை விட ஜீவானந்தம், தொல்காப்பியன் என்று சொன்னால் அனைவருக்கும் ஞாபகத்துக்கு வருவது கோலங்கள் மற்றும் எதிர்நீச்சல் சீரியல் தான். அதுவும் கோலங்கள் போல ஒரு சீரியலை இப்போ உள்ள காலத்தில் பார்க்க முடியாது என்று சொல்வதற்கு ஏற்ப அபி, தொல்காப்பியன், உஷா இவர்களுடைய நட்பு பலருக்கும் மிகப்பெரிய ஆதங்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு ஏக்கமாக இருந்தது.

அத்துடன் நட்புக்கு இலக்கணமாக இருந்த இவர்களுக்கு மக்கள் எந்த அளவுக்கு வரவேற்பு கொடுத்தார்களோ, அதே மாதிரி இதில் வில்லன் கதாபாத்திரத்தில் அசால்டாக நடிப்பை தூக்கி வாரிய ஆதி என்கிற அஜய் கபூர் இந்த நாடகத்திற்கு மிகவும் பக்கபலமாக நடிப்பை கொடுத்திருந்தார். அதனால் என்னமோ 1500 எபிசோடு மேல் ஒளிபரப்பாகி வெற்றியை தக்கவைத்துக் கொண்டது.

இதனை தொடர்ந்து பல வருடங்களுக்குப் பிறகு திருச்செல்வம் இயக்கிய சீரியல் தான் எதிர்நீச்சல். இதுலயும் கதை மற்றும் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. அத்துடன் இந்த சீரியலுக்கு மிகவும் பில்லர் ஆக இருந்தது குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து கேரக்டர். இவர் மட்டும் தொடர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தால் இந்த நாடகம் இன்னும் வரை மக்களிடம் ஒய்யாரமான ஒரு இடத்தை பிடித்திருக்கும்.

அந்தளவிற்கு வில்லன் கேரக்டரில் குணசேகரன் கதாபாத்திரமும் பெயர் வாங்கி விட்டது. இதனை தொடர்ந்து தற்போது திருச்செல்வம் இன்னொரு கதையுடன் கூடிய விரைவில் சந்திக்கப் போகிறார். அதற்கான ஷூட்டிங் எல்லாம் நடைபெற்று வரும் இந்த நேரத்தில் ஜனனி கதாபாத்திரத்தில் நடித்த மதுமிதா இந்த அத்தியாயத்தில் இருந்து விலகப் போவதாக ஏற்கனவே அறிவிப்பை கொடுத்திருந்தார்.

இவரை தொடர்ந்து தாரா கதாபாத்திரத்தில் நடித்த குட்டி பாப்பாவும் எதிர்நீச்சல் இரண்டாம் பாகத்தில் வரப்போவதில்லை என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு வந்திருந்தது. இப்படி விறுவிறுப்பாக ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து கதைகள் கொண்டுவரும் இந்த சூழ்நிலையில் திருச்செல்வம் நாடகத்தில் மிகப்பெரிய விஷயமாக இருப்பது வில்லன் கேரக்டர் தான்.

அந்த வகையில் எதிர்நீச்சல் பார்ட் 2 நாடகத்தில் யார் வில்லனாக இருப்பார் என்ற கேள்வி தற்போது மக்களிடம் நிலவி வருகிறது. பொதுவாக யாருமே எதிர்பார்க்காத ஒரு ஆர்டிஸ்ட் தான் வில்லனாக திருச்செல்வம் கொண்டு வருவார். அந்த வகையில் எதிர்நீச்சல் பார்ட் 2 வில்லனாக ஆதி என்கிற அஜய் கபூர் நடிக்க வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில் 90 கிட்ஸ்க்கு மறுபடியும் ஒரு நல்ல கதையுடன் கூடிய கதாபாத்திரங்களை பார்க்க வாய்ப்பு கிடைக்கப்போகிறது.

- Advertisement -

Trending News