Connect with us

Cinemapettai

ஹீரோ படத்தால் நொந்த சிவகார்த்திகேயன்.. வேறு வழியில்லாமல் ஆசான் இயக்குனரிடம் தஞ்சமடைந்தார்

sivakarthikeyan-cover

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஹீரோ படத்தால் நொந்த சிவகார்த்திகேயன்.. வேறு வழியில்லாமல் ஆசான் இயக்குனரிடம் தஞ்சமடைந்தார்

தமிழ் சினிமாவில் நம்பிக்கை நாயகனாக உருவெடுத்து வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளிவந்த அனைத்து படங்களும் ஓரளவு வெற்றியை பெற்றது. ஒரு சில படங்கள் தோல்வி பெற்றாலும் அடுத்தடுத்த படங்களின் மூலம் தோல்வியை சரி கட்டி தொடர்ந்து வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறார்.

ஆனால் சமீபத்தில் வெளிவந்த ஹீரோ படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. ஹீரோ படம் வெளிவருவதற்கு முன்பே பலவிதமான சர்ச்சைகளில் சிக்கியது. குறிப்பாக ஹீரோ பட கதை திருட்டு விவகாரம் சிவகார்த்திகேயனை ஆட்டிப் படைத்தது.

ஆனால் ஹீரோ படத்திற்கு முன்னர் வெளிவந்த நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றி பெற்றது. இதனால் தற்போது சிவகார்த்திகேயன், இயக்குனர் பாண்டியராஜ் இருவரும் நான்காவது முறையாக இணைய உள்ளனர் என செய்திகள் வெளிவந்துள்ளது. கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் விமலுடன் சேர்ந்து சிவகார்த்திகேயன் நடித்து இருப்பார்.

இந்த படத்தை மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனரிடமே தன்னுடைய வெற்றிக்கு வழி செய்யுமாறு சிவகார்த்திகேயன் தஞ்சம் அடைந்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top