fbpx
Connect with us

Cinemapettai

மூன்றாவது முறையாக பிரபல இயக்குனருடன் கூட்டு சேரும் தனுஷ்.. விளங்காத படத்தின் மூன்றாம் பாகமாம்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மூன்றாவது முறையாக பிரபல இயக்குனருடன் கூட்டு சேரும் தனுஷ்.. விளங்காத படத்தின் மூன்றாம் பாகமாம்!

தமிழ் சினிமாவின் லெஜென்ட் என சொல்லும் அளவுக்கு நாளுக்கு நாள் தன்னுடைய வளர்ச்சியில் மற்றவர்களை மிரள வைத்து வருகிறார் தனுஷ். நடிப்பையும் தாண்டி தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், இயக்குனர் என பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் இருந்து முதல் முறையாக ஹாலிவுட் படத்தில் நடித்த ஹீரோ என்ற பெருமையும் இவருக்குத்தான் உண்டு. தனுஷ் நடிப்பில் பக்கிரி எனும் ஹாலிவுட் டப்பிங் படம் வெளியானது குறிப்பிடதக்கது.

ராஜ்கிரன், ரேவதி ஆகியோரை வைத்து பவர் பாண்டி எனும் படத்தை இயக்கி வெற்றியும் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மீண்டும் தனது இரண்டாவது படத்தில் இயக்குநராக களம் இறங்கி உள்ளார் தனுஷ்.

இப்படி பிஸியாக இருக்கும் தனுஷ் ஜகமே தந்திரம் படத்திற்கு பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் 90 சதவீத படப்பிடிப்புகளை முடித்து விட்டார். அதனைத் தொடர்ந்து மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நான்காவது முறையாக இணைய உள்ளார்.

மேலும் கார்த்திக் நரேன் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். கைவசம் ஹிந்தி படம் ஒன்று உள்ளது. இப்படி பிசியாக இருக்கும்போது தனக்கு மூன்றாவது முறையாக மாரி படத்தை இயக்கிய பாலாஜி மோகன் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறாராம்.

மாரி, மாரி 2 ஆகிய படங்களை இயக்கிய பாலாஜி மோகன் தற்போது மீண்டும் தனுஷுடன் இணைந்து மாரி 3 படத்தை உருவாக்குவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாரி படம் கூட பாக்ஸ் ஆபீஸில் ஓரளவு வெற்றி பெற்றது. ஆனால் மாரி 2 படுதோல்வி அடைந்தது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். இருந்தும் என்ன தைரியத்தில் மாரி 3 எடுக்கப் போகிறார்கள் என்பது தான் தெரியவில்லை என புலம்புகிறது கோலிவுட்.

Continue Reading
To Top