இந்தியன் டாய்லெட் இருந்தவரை போன வேலையை மட்டும் பார்த்துவிட்டு வந்தார்கள். ஆனால் எப்போது இந்த வெஸ்டர்ன் டாய்லெட் வந்ததோ, அரை தூக்கத்தில் சென்று உட்கார்ந்தார்கள் என்றால் குறைந்த பட்சம் அரை மணி நேரம் கழித்து தான் வெளியில் வருவார்கள். அதுவும் ஸ்மார்ட் போன் வந்த பிறகு இன்னும் மோசம். போதா குறைக்கு இன்ஸ்டாகிராம் வந்த பிறகு, வேலையை ஆரம்பிக்கும்போது, பார்க்க துடங்கி, வேலை முடிந்ததையும் மறந்து அங்கையே உட்கார்ந்து பார்த்து கொண்டிருப்பார்கள்.
வீட்டில் ஒரு டாய்லெட் மட்டும் தான் இருக்கிறது என்றால், மற்றவர்கள் பாடு திண்டாட்டம் தான். இந்த நிலையில், டாய்லெட்-க்கு போயி பல மணி நேரம் நீங்கள் ரிலாக்ஸ் செய்வதற்கு முன், முக்கியமான சில விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டியது கட்டாயமாக உள்ளது.
இந்தியன் டாய்லெட் முறையிலிருந்து முற்றிலும் வேறுபட்டதுதான் இந்த வெஸ்டர்ன் டாய்லெட். இதில் உட்கார்ந்தாள், கால் வலிக்காது. அதனால் முதியவர்களுக்கு மிகவும் வசதியானது என்றே சொல்லலாம்.
இதை முதலில் செய்யுங்கள்…
இன்றளவு முதியவர்கள் என்று இல்லாமல், குழந்தைகள் கூட இதற்க்கு பழகி விட்டது. அப்படி இருக்க, உள்ளே சென்றவுடன் முதலில் உட்காராதீர்கள்.
அமர்வதற்குமுன் சீட்டை சுற்றியுள்ள ஈரத்தை துடைத்து எடுங்கள். ஈரம் இல்லாவிட்டாலும் சுற்றிலும் துடைத்துவிட்டு அமர்வது நல்லது. இருக்குற அவசரத்துல இது வேறையா என்று உங்களுக்கு தோன வாய்ப்பு இருக்கு.. ஆனால் இது தான் சரியான அணுகுமுறை.
அதேபோல் அமரும் முன் ஒரு முறை ஃபிளஷ் செய்வதும் நல்லது. சிங்க்கை சுற்றிலும் அழுக்கு இருப்பின் நீங்கிவிடும். பொதுக்கழிப்பிடமாக இருப்பின் கட்டாயம் ஃபிளஷ் செய்தபின் பயன்படுத்துங்கள். இதனால் சிறுநீர் பாதை தொற்று வராமல் தவிர்க்கலாம்.
முக்கியமாக வேலை முடிந்த பின் ஃப்ளஷ் செய்வதற்கு முன், அந்த சீட்டை கண்டிப்பாக கிலோஸ் செய்துவிட்டு, ஃப்ளஷ் செய்யுங்கள். இதனால் கிருமிகள், முக்கியமாக ஃப்ளஷ் செயும்போது, அதிலிருந்து எழும் ஒரு வகை ரசாயனம் உங்களை பாதிக்காமல் இருக்கும்.