thimiru-pudichavan-review
thimiru-pudichavan-review

விஜய் ஆண்டனி மற்றும் நிவேதா பெத்துராஜ் நடித்து வெளிவந்திருக்கும் படம் திமிர் புடிச்சவன். இப்படத்தின் மையக் கருவாக சிறார்களை மீட்பது. அப்படி என்றால் 18 வயதிற்கு கீழே இருப்பவர்கள் கொலை கொள்ளை கற்பழிப்பு போன்ற விஷயங்கள் செய்தால் தண்டனைகள் குறைவாகவே இருக்கும் என்ற ஒரு தவறான கருத்தை வில்லன் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறான்.

அதில் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்கள் மீட்டு எடுப்பது இப்படத்தில் விஜய் ஆண்டனி காவல்துறையாக இருந்து பணியாற்றியுள்ளார். அதில் சென்டிமென்டாக அவர் தம்பியும் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் வரும் அனைத்து பஞ்ச் டயலாக்குகளும் ரசிகர்களின் கைத்தட்டல் வாங்கியுள்ளனர். நிவேதா பெத்துராஜ் மதுரை பொண்ணு என்றாலும் சென்னை பாஷையில் மிக அற்புதமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் படித்தவை:  திமிரு புடிச்சவன் இவன் திமிருக்கே புடிச்சவன் ப்ரோமோ வீடியோ.!

மொத்தத்திலே படத்தை பார்க்கும்போது காமெடியான சீன்கள் சீரியஸாகவும் சீரியஸான சீன்கள் காமெடியாகவும் வெளிவந்துள்ளது. அது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இப்படத்தில் ஹீரோவும் வில்லனும் எலியும் பூனையும் போல் நடித்துள்ளனர். வில்லனாக தீனா நடித்துள்ளார் அவருக்கு ஒட்டுமீசை வைக்காமலேயே மிரட்டலாக இருப்பார் ஆனால் அந்த மீசையும் காமெடியாக போய்விட்டது.

thimiru pudichavan

மிக முக்கியமான காமெடி என்னவென்றால் ஒரு சீரியஸான கட்டத்தில் விஜய் ஆண்டனி இனி உங்கள் வீட்டில் பாத்ரூம் பக்கெட் காணாமல் போனால் கூட காவல்துறையினர்டம் புகார் அளிக்க வேண்டும் என்றும் அதனை வழக்கு என்று வரும் போது காவல்துறையினர் நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் கூறுவது மிகப் பெரும் காமெடியாக இருக்கிறது. இதனை கார்பஸ் மனு என்று அறிஞர் கூறுவர்.

அதிகம் படித்தவை:  திமிரு புடிச்சவன் படத்தின் "கண்ணாடி" வீடியோ பாடல்.

முழுமையாக இப்படத்தை பார்த்து கூறுவது என்னவென்றால் சீரியஸான ஒரு படம் மிகப்பெரும் காமெடியாக அமைந்து விட்டது இது ரசிகர்களிடையே வரவேற்பு பெறுமா என்பது அடுத்த வாரம் தெரியும் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Rating: 2.5/5