சிங்கப்பெண்ணில் மகேஷுக்கு தில்லைநாதன் வைத்த செக்.. ஆனந்தியை அசிங்கப்படுத்திய கருணாகரன்

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலில் இந்த வாரம் முழுக்க ஆனந்திக்கு பணம் கொடுத்து உதவ போவது யார் என்பதுதான் பெரிய எதிர்பார்ப்பாக இருக்கும். நாலு நாட்களுக்குள் பணத்தை கொடுக்கவில்லை என்றால் பரம்பரை சொத்து கையை விட்டு போய்விடும் என்பதால் ஆனந்தியின் அப்பா ரொம்பவே மனம் உடைந்து போய் இருக்கிறார்.

ஆனந்தியும் தன்னால் முடிந்த அளவு பணத்தை புரட்ட எவ்வளவு முயற்சி செய்து பார்த்து விட்டாள். ஆனந்தியின் தோழிகள் மற்றும் வார்டன் அவளுக்கு எந்த உதவியும் செய்ய முடியாத நிலைமையில் இருக்கிறார்கள்.

உன்னுடைய பண பிரச்சனையை மகேஷ் நினைத்தால் மட்டும் தான் தீர்த்து வைக்க முடியும் என வார்டன் ஆனந்திக்கு ஐடியா கொடுக்கிறார். வார்டனின் பேச்சை கேட்டு போனார் ஆனந்திக்கு அங்கு அவமானம் தான் மிஞ்சியது.

மகேஷுக்கு தில்லைநாதன் வைத்த செக்

ஆனந்தி போவதற்கு முன்னாடியே மகேஷின் அம்மாவிடம் போன் போட்டு மித்ரா ஆனந்திக்கு பணம் கொடுக்காதவாறு செய்துவிட்டாள். மகேஷின் மீது இருக்கும் அதீத காதலால் மித்ரா ஆனந்தியை அவன் காதலித்து விடக்கூடாது என செய்யும் சதி எல்லாம் சரிதான்.

ஆனால் ஆனந்தி கஷ்டப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும் அதை பார்த்து சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என மித்ரா நினைப்பது எரிச்சலாக தான் இருக்கிறது. மகேஷ் தனக்குத் தெரியாமல் ஆனந்திக்கு பணம் கொடுத்து விடக்கூடாது என மித்ரா உறுதியாக இருக்கிறாள்.

இதற்கு தில்லை நாதனை பகடைக்காயாக உபயோகப்படுத்திக் கொண்டாள். இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மகேஷ் கையெழுத்து போட்டு அனுப்பிய செக் பவுன்ஸ் ஆகி திரும்பி வந்துவிடுகிறது. உடனே மகேஷ் அவனுடைய அப்பாவிடம் இதைப் பற்றி சொல்கிறான்.

அதற்கு தில்லைநாதன் நான்தான் அப்படி செய்தேன். இனி நீ கையெழுத்து போட்டுக் கொடுக்கும் செக்குகள் செல்லாது என மகேஷை லாக் பண்ணுகிறார். அதே நேரத்தில் அன்பு எவ்வளவு முயற்சி செய்தும் 10 லட்சம் ரூபாயை அவனால் ஆனந்திக்கு புரட்டி கொடுக்க முடியவில்லை.

மித்ரா, ஆனந்திக்கு இருக்கும் சிக்கலை கருணாகரனிடம் சொல்லி, அவளுக்கு யாருமே பணம் கொடுக்கக் கூடாது என சொல்கிறாள். கருணாகரனும் கார்மெண்ட்ஸ் உள்ளே வேலை செய்யும் அத்தனை பேரையும் அழைத்து ஆனந்திக்கு நகை அல்லது பணம் என எதையுமே கொடுக்க கூடாது என உத்தரவு போடுகிறார்.

அத்தனை பேரையும் அழைத்து இப்படி சொல்வது ஆனந்தியை ரொம்பவே அசிங்கப்படுத்தும் விதமாக இருக்கிறது. இதையெல்லாம் தாண்டி ஆனந்தி தன் சொந்த நிலத்தை மீட்டெடுக்கிறாளா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

சிங்க பெண்ணில் சமீபத்தில் நடந்த சம்பவங்கள்

- Advertisement -spot_img

Trending News