fbpx
Connect with us

Cinemapettai

ப்ளேபாய் நடிகரின் வலையில் விழுந்த பிரபல வாரிசு நடிகை.. இனி அந்த காதலியோட நிலைமை?

Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema Kisu Kisu

ப்ளேபாய் நடிகரின் வலையில் விழுந்த பிரபல வாரிசு நடிகை.. இனி அந்த காதலியோட நிலைமை?

ஒரே ஒரு குடிகார லவ் ஃபெய்லியர் படத்தின் மூலம் உலகமெங்கும் பிரபலமானவர் தான் அந்த பிரபல நடிகர். அந்தப்படம் இந்தியாவிலுள்ள அனைத்து மொழியிலும் ரீமேக் ஆனதால் நடிகருக்கு எக்கச்சக்க மவுசு கூடியது.

தொடர்ந்து அதே மாதிரியான லவ் மற்றும் படுக்கையறை காட்சிகள் அதிகம் கொண்ட படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். ஏன் இன்றைய இளம் நாயகிகள் அனைவரும் அந்த நடிகருடன் நடிக்க ஏங்கிக் கிடக்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல் இளம்பெண்களுக்கு அந்த நடிகர் தான் தற்போது ஃபேவரிட். ஆனால் சமீபத்தில் உலகப்புகழ் காதலன் என்ற படம் படுதோல்வியை சந்தித்தது. அதுமட்டுமல்லாமல் நடிகர் நடிக்கும் படங்கள் அனைத்துமே சமீபகாலமாக மண்ணை கவ்வி வருகின்றன.

நடிகருக்கு வெளிநாட்டில் ஒரு காதல் இருப்பதாக செய்திகள் வெளிவந்தது. அதை உண்மையாக்குமாறு அவ்வப்போது புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார். ஆனால் தற்போது வட நாட்டில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி வாரிசு நடிகை ஒருவருடன் நடித்துக் கொண்டிருக்கிறார்.

படப்பிடிப்பு தளத்திலேயே ஒரு நட்பு அதிகமாகி வருவதை கண்ட படக்குழுவினர், இது எங்க போய் முடிய போகுதோ என ஆரம்பத்திலேயே தலையில் அடித்துக் கொண்டார்களாம். தற்போது இருவருக்கும் நெருக்கம் அதிகமாகி விட்டதாம்.

நீ இல்லாமல் நான் இல்லை, நான் இல்லாமல் நீ இல்லை என பாட்டு கூட பாடிக் கொண்டு திரிகிறார்களாம். அந்த வாரிசு நடிகை தற்போது தமிழில் பெரிய நடிகரை வைத்து படம் தயாரித்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளரின் மகள் தான்.

இவரை வளைத்துப் போட நினைத்த அந்த நடிகர் சமீபகாலமாக பழைய காதலியுடன் பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்டாராம். இது தெரிந்த பழைய காதலி எப்போது வேண்டுமானாலும் கிளம்பி வரலாம் என்கிறது ஒரு தரப்பு.

ஆனால் நடிகரோ சினிமாவில் இதெல்லாம் சகஜமப்பா என இஷ்டத்திற்கு நடிகைகளிடம் புகுந்து விளையாடி வருகிறாராம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top