பைரவா: அவங்க சொன்ன மாதிரியே செஞ்சிட்டாங்களே!

பைரவா படம் இன்று ரிலீஸான சில மணிநேரத்தில் இணையதளத்தில் அதை வெளியாகியுள்ளது. பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பைரவா படத்தை உலக அளவில் 1000க்கும் மேற்பட்ட அரங்குகளில் வெளியிட்டுள்ளார்கள். இந்நிலையில் படம் இந்தியாவில் வெளியாகும் முன்பே ஃபேஸ்புக் லைவில் வந்தது. ட்விட்டரிலும் படத்தை பிட்டு பிட்டாக வெளியிட்டுவிட்டார்கள்.

பொங்கலுக்கு தியேட்டர்களில் வெளியாகும் பைரவாவை அதே நாளில் இணையதளத்தில் வெளியிடுவோம் என்று ஒரு கும்பல் தெரிவித்தது. அது கூறியபடியே பைரவா படத்தை இணையதளத்தில் வெளியிட்டுவிட்டது.

காலை 9.30 மணி அளவில் இணையதளத்தில் பைரவா வெளியாகிவிட்டது. விஜய்யின் படத்திற்கு பல வகைகளில் இப்படி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படையெடுத்து வருகிறார்கள். எவன் படத்தை கசியவிட்டால் என்ன நாங்கள் தியேட்டரில் பார்த்து ஹிட்டாக்குவோம் என்கிறார்கள் ரசிகர்கள்.

Comments

comments

More Cinema News: