விடாம துரத்திட்டு வந்து அட்ஜஸ்ட்மெண்டுக்கு எவ்வளவு ரேட்னு கேட்டாங்க! அந்தரங்க டார்ச்சரில் எதிர்நீச்சல் நடிகை

Ethirneechal Serial Actress: சினிமாவை பொறுத்தவரை நடிகைகள் வாய்ப்பு தேடி செல்லும் போது அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனையை சந்தித்து வருவது இப்போது சர்வ சாதாரணமாகிவிட்டது. இதனால் பல நடிகைகள் தங்களுக்கு நடந்த அந்தரங்க டார்ச்சலை பற்றி இப்போது வெளிப்படையாக பேசத் துவங்கி விட்டனர்.

பெரும்பாலும் நடிகைகள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். சிலர் இந்த டார்ச்சலை தாங்க முடியாமலேயே சினிமாவை விட்டு ஓடிய கதை எல்லாம் இருக்குது. பொதுவாக நடிகைகள் பேட்டியளிக்கும் போது கேட்கப்படும் முதல் கேள்வி, ‘அட்ஜஸ்ட்மென்ட் உங்களுக்கு நடந்திருக்கிறதா? என்பது தான்.

எதிர்நீச்சல் சீரியல் நடிகையிடம் இந்த கேள்வியை கேட்டிருக்கின்றனர். டிஆர்பியில் பயங்கர டஃப் கொடுத்த கொடுத்துக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த சீரியலில் ஜான்சி ராணி என்ற வில்லி கேரக்டரில் நடிப்பவர் தான் நடிகை காயத்ரி கிருஷ்ணன். செம போல்ட் ஆன குரல் வளத்தை கொண்ட இவர் தனக்கு நடந்த மோசமான அனுபவத்தை பற்றி பேட்டி ஒன்றில் போட்டுடைத்தார்.

உங்களுக்கு அந்தரங்க டார்ச்சல் நடந்திருக்கிறதா? என செய்தியாளர் கேட்டதற்கு சரமாரியாக சாடி இருக்கிறார். ஒரு முறை இவரை விடாமல் துரத்திட்டு வந்து எவ்வளவு ரேட்டுன்னு கேட்டு அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்து அந்தரங்க டார்ச்சர் செய்ததாகவும் சொன்னார்.

அதிலும் குடித்துவிட்டு தங்கி இருக்கும் ரூமுக்கும் வந்து விடுவார்கள். சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் இதையெல்லாம் எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் திணறியதும் உண்டு. இதெல்லாம் பெருசா பார்த்தால் நடிகையாக முடியாது என்று ஜான்சி ராணி தனக்கே உரித்தான போல்டான ஸ்டைலில் பேசினார்.

நடிகைகள் தங்களுக்கு நடந்த அட்ஜெஸ்மெண்டை பற்றி இப்போதெல்லாம் பெரிதுபடுத்துகிறார்கள். உங்களுக்கு பிடித்தால் அட்ஜஸ்ட்மென்ட் செய்யுங்கள், இல்லை என்றால் பெரிய கும்பிட போட்டுட்டு கிளம்பிடுங்கள். அதை விட்டுட்டு அதையே பெரிய சீனா பேசி சிம்பதி கிரியேட் பண்ணாதீர்கள் என்றும் எதிர்நீச்சல் ஜான்சி ராணி சமீபத்திய பேட்டியில் தெரிவித்தார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்