சச்சின்:
கிரிக்கெட் கடவுள் என அன்பாக அழைக்கப்படும் சச்சின் கார்களின் காதலனாக இருக்கின்றார். இவர் பி.எம்.டபில்யூ காரின் விளம்பர தூதராக உள்ளார். இவரின் வீட்டு கார் கூடாரத்தில், தனக்கென மாற்றியமைக்கப்பட்ட கார்கள் அணிவகுத்து நிற்கிறது.

சச்சின் தற்போது BMW 750Li M என்ற காரை பயன்படுத்தி வருகின்றார். அதோடு, அவரின் வீட்டில் BMW i8, BMW 760Li, BMW X5 M50d, BMW M6 Gran Coupe, BMW M5 “30 Jahre M5” வரையறுக்கப்பட்ட பதிப்பு, Nissan GT-R ஆகிய சொகுசு கார்களை வைத்துள்ளார்.

அதிகம் படித்தவை:  விஜய் சேதுபதியின் மாஸ் லுக் ! செக்க செவந்த வானம் மூன்றாவது லுக் போஸ்டர் !

தோனி:
தோனி பைக் பிரியர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் பல சொகுசு கார்களின் நாயகன் என்பது சிலருக்கு தான் தெரியுமாம். இவரிடம் Hummer H2, GMC Sierra, Audi Q7, Land Rover Freelander 2, Mitsubishi Pajero ஆகிய கார்கள் உள்ளன.

கோலி:
ரன் மெஷின் கோலி பேஷனாக இருப்பதில் பிரியமிக்கவர். இருப்பினும் இவர் குறைந்த அளவில் மட்டும் சொகுசு கார்களை வைத்துள்ளார். இவருக்கு மிகவும் பிடித்த சொகுசு கார் Audi Q7 4.2 TDI.

அதிகம் படித்தவை:  வாட்ஸ்அப் - யில் அனுப்பிய ஒரு வார்த்தையால் திசை மாறிப்போன 6 அப்பாவி இளைஞர்களின் வாழ்க்கை!!

யுவராஜ் சிங்:
யுவராஜ் சிங் கடந்த 2001ம் ஆண்டிலிருந்து கார் கலெக்‌ஷனில் ஆர்வம் தொற்றிக்கொண்டதாம். அவர் முதலில் ஹோண்டா சிட்டி வாங்கி தன் கலெக்‌ஷனை ஆரம்பித்துள்ளார். தற்போது இவரிடம் Audi Q5, BMW M3, BMW M5 மற்றும் Lamborghini Gallardo ஆகிய கார்கள் உள்ளன்