கொடுத்த காசுக்கு மேல கூவுன VP அண்ட் கோ.. சோலியை முடித்த ப்ரொடியூசர் அக்கா, கோட் ட்ரோலுக்கு காரணம் இதுதான்

GOAT: விஜய் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோட் நேற்று ஒரு வழியாக திரைக்கு வந்தது. இந்த நாளுக்காக காத்திருந்த தளபதியின் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். அதே சமயம் சில நெகட்டிவ் விமர்சனங்களும் மீடியாவை சுற்றி வருகிறது.

கதை திரைக்கதை சரியில்லை, லாஜிக் மிஸ்டேக் இருக்கிறது என ஏகப்பட்ட கருத்துக்கள் கிளம்பி வருகிறது. விஜய் ரசிகர்கள் கூட சில காட்சிகளை அதிகப்படியாக இருப்பதாக கூறி வருகின்றனர்.

உண்மையில் படம் சராசரியான கதை தான். அதை ரசிகர்களுக்கு பிடித்த வகையில் சுவாரசியமாக கொடுக்க முயற்சித்துள்ளார் வெங்கட் பிரபு. அதுவும் சரியான விஷயம் தான் இது அப்படியே இருந்திருந்தால் நிச்சயம் படம் வேற லெவலில் இருந்திருக்கும்.

ஆனால் எதிர்பார்ப்பை அதிகப்படுத்துகிறேன் என்ற பெயரில் வெங்கட் பிரபு மற்றும் அவரின் கூட்டாளிகள் அடித்த கூத்துதான் இப்போது தப்பாக போயிருக்கிறது. அதேபோல் ப்ரொடியூசர் அக்காவும் ஒரு சேனல் விடாமல் வளைத்து வளைத்து பேட்டி கொடுத்து ஆர்வத்தை கிளறி விட்டார்.

ஓவர் அலப்பறை கொடுத்த ப்ரொடியூசர்

இதனால் ஒட்டு மொத்த மீடியாக்களின் கவனமும் செப்டம்பர் 5ம் தேதி மீதுதான் இருந்தது. இதில் அர்ச்சனா படம் முதல் நாளிலேயே 100 கோடியை தாண்டி வசூலிக்கும். 5000 ஸ்கிரீன் என ஓவர் அலப்பறை கொடுத்திருந்தார்.

மேலும் பிரேம்ஜி, வைபவ் என அனைவரும் இன்ட்ரோ சீன், கிளைமாக்ஸ் என ஒவ்வொரு சீனாக ஹைப் ஏற்றி வந்தனர். ஆனால் கடைசியில் படத்தில் சிலாகித்து பேசும் அளவிற்கு புதிய விஷயங்கள் ஒன்றுமில்லை. இந்த அளவுக்கு அலப்பறை இல்லாமல் இருந்திருந்தால் கூட அந்த காட்சிகள் கொண்டாடப்பட்டிருக்கும்.

இதுதான் பெரும் தவறாக போயிருக்கிறது. அதனாலேயே கோட் இப்போது சில நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இதனால் படம் ஃப்ளாப் லிஸ்டில் இடம் பெறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஒரு வேளை அப்படி நடந்தால் அதற்கு முழு காரணமும் ப்ரொடியூசர், அக்காவும் வெங்கட் பிரபுவும் தான்.

கோட் படத்தை மொத்தமாக முடித்து விட்ட வெங்கட் பிரபு

Next Story

- Advertisement -