ஓவர் அலும்பு பண்ணும் தளபதியின் அல்லக்கைகள்.. தேர்தலுக்கு முன்னாடி கட்சியை காலி பண்ணாம விட மாட்டாங்க போல

Actor Vijay: விஜய் கட்சி ஆரம்பித்தாலும் ஆரம்பித்தார் அல்லக்கைகளின் அட்டூழியம் அதிகமாகி கொண்டு தான் இருக்கிறது. விசுவாசிகள் என்ற பெயரில் அவர்கள் அடிக்கும் கூத்து கொஞ்ச நஞ்சமல்ல.

கட்சி ஆரம்பித்த கையோடு மகளிர்க்கு முன்னுரிமை, விலை இல்லா வீடுகள் என டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறார் விஜய். அது மட்டுமா, கேரளாவில் ரசிகர்களை சந்தித்து பெரும் வரலாறையே ஏற்படுத்தி விட்டார்.

இதனால் சோசியல் மீடியாவே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இதன் மூலம் அவர் தனக்கான வாக்குகளையும் மறைமுகமாக சேகரித்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் அது புரியாத விசுவாசிகள் பேசியே மொத்தத்தையும் காலி செய்து கொண்டிருக்கிறார்கள். அதில் திமுக, அதிமுகவை ஓரங்கட்ட தளபதி வந்துவிட்டார்.

விஜய் விசுவாசிகளின் அலப்பறை

கட்சி அறிவிப்பு வெளியிடும் முன்பே எங்களிடம் 10 சதவீத வாக்குகள் இருந்தது. இப்போது 50 லட்சம் உறுப்பினர்கள் ஒரே நாளில் குவிந்து விட்டார்கள்.

அதனால் 2 கோடி உறுப்பினர்கள் என்பதெல்லாம் எங்களுக்கு சாதாரண விஷயம். இதெல்லாம் சும்மா டீசர் தான். மெயின் பிக்சர் பார்த்தால் மிரண்டுவீங்க என வளைத்து வளைத்து பேட்டி கொடுத்து வருகின்றனர்.

ஆனால் ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதை இவர்கள் புரிந்து கொள்ளவில்லை. சோசியல் மீடியாவில் ஆதரவு இருந்தால் மட்டும் போதுமா. மக்கள் மனதில் நிரந்தர இடம் பிடிக்க வேண்டும்.

அரசியலில் பழம் தின்னு கொட்டை போட்ட கட்சிகளே திண்டாடி கொண்டிருக்கிறது. அப்படி இருக்கும்போது இன்னும் ஒரு தேர்தலை கூட பார்க்காமல் இவர்கள் கொடுக்கும் அலப்பறை தான் பரிதாபமாக உள்ளது.

இவர்களை எல்லாம் விஜய் ஆரம்பத்திலேயே தட்டி வைக்க வேண்டும். இல்லையென்றால் இவரையே காமெடி பீஸாக மாற்றினாலும் மாற்றி விடுவார்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்