புதன்கிழமை, நவம்பர் 13, 2024

விஜய் கட்சியில் இந்த கூட்டணி confirm.. இப்போதே வலு பயங்கரமா இருக்கே

மாநாடு நடந்ததில் இருந்து முக்கிய இரண்டு மாற்றங்கள் தமிழகத்தில் நடந்துள்ளது.  ஒன்று ஒரு மாற்றம் கிடைத்து விட்டது என்ற மகிழ்ச்சியில் மக்கள் இருக்கின்றனர்.  மற்ற ஒன்று, எல்லா கட்சி தலைவர்களும் கதிகலங்கி போயி நிற்பது தெரியாமல் இருக்க, வன்மத்தை கக்கி கொண்டிருக்கின்றனர்.

மாநாடு நடந்து முடிந்ததிலிருந்து திமுக தன் கூட்டணி காட்சிகளை ஏவி விட, கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் எல்லாம் வார்த்தைகளில் உள்ள பிழைகளை பூதக்கண்ணாடி போட்டு தேடி, அதை விமர்சித்து வருகின்றனர்.  நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானோ உருட்டு மஹாலிங்கமாக உருவெடுத்து, மாற்றி மாற்றி பேசிக்கொண்டிருக்கிறார். 

இதில் முக்கியமாக சீமான் “நடிகர் விஜய் ரசிகர்களின் வோட்டுகள் எனக்கு தான்.. விஜய் வருகையால் எனக்கு வோட்டு குறையாது ” என்று பேசியது சிரிப்பலையை ஏற்படுத்தியது.  மேலும் நெட்டிசன்கள், “வோட்டு குறையாது அல்ல.. உங்களுக்கு வோட்டே கிடையாது” என்று சீமானை வச்சு செய்துகொண்டிருக்கிறார்கள்..

இந்த கூட்டணி Confirm..

சூழ்நிலை இப்படி இருக்க, தளபதி விஜய், “எங்களுடன் கூட்டணி பெறுபவருக்கு ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு” என்று அறிவித்து அதிரடி காட்டி இருந்தார்.  இதை தொடர்ந்து இதுவரை அதிமுக, கம்யூனிஸ்ட் காட்சிகள், தேமுதிக மட்டும் தான் இவரது பேச்சை விமர்சனம் செய்யவில்லை.

மேலும் அதிமுகவோ கூட்டணி பற்றி தேர்தல் வருகையில் தான் யோசிப்போம் என்று கூறி இருக்கிறார்.  மறுபுறம் ops சைலன்ட் ஆக இருக்கிறார்.  இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது, தவேக, அதிமுக, தேமுதிக கூட்டணி Confirm என்று தான் தோன்றுகிறது.  இதில் ops வந்து இணையவும் வாய்ப்புள்ளது.

அதுமட்டுமின்றி, இந்த கூட்டணியில் கம்யூனிஸ்ட் காட்சிகள் வர 50 சதவீத வாய்ப்பிருக்கிறது.  ஆரம்பமே பயங்கரமா இருக்கிறது.  மேலும் பக்கா அரசியல்வாதியாக மாறி வருகிறார் விஜய்.  2026 தேர்தல் பெரும் போர்க்களமாக தான் இருக்க போகிறது. 

- Advertisement -spot_img

Trending News