சொந்த வாழ்க்கையில் நடந்ததை படமாக்கிய 3 இயக்குனர்கள்.. கைதட்டலை அள்ளிய கெளதம் வாசுதேவ மேனன்

பொதுவாக சினிமா ரசிகர்களிடம் உண்மை கதையை மையப்படுத்தி எடுக்கும் படங்களுக்கு எப்போதுமே வரவேற்பு கிடைக்கும். இதுபோன்ற பல திரைப்படங்களை நாம் பார்த்திருக்கிறோம். அந்த வகையில் சில இயக்குனர்கள் தங்கள் வாழ்க்கை மற்றும் பள்ளி, கல்லூரி காலகட்டங்களில் நடந்த அனுபவங்களை வைத்து படங்களை இயக்கி அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். அவற்றைப் பற்றி இங்கு காண்போம்

கௌதம் வாசுதேவ் மேனன்: இவர் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற அழகான காதல் கதையை கொடுத்து ரசிகர்களை கவர்ந்தவர். சிம்பு, திரிஷாவின் நடிப்பில் இப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் மற்றும் காதல் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது.

இந்தத் திரைப்படத்தை இயக்குனர் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களை ஒன்றாக கோர்த்து இயக்கியிருக்கிறார். சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த பல காதல் காவியங்களில் இந்த திரைப்படமும் ஒன்று.

வினீத் ஸ்ரீனிவாசன்: மலையாள திரையுலகில் பிரபல நடிகராக இருக்கும் இவர் ஒரு நடிகராக மட்டுமின்றி இயக்குனர், தயாரிப்பாளர் என்ற பன்முகத் திறமை கொண்டவர். இவரின் இயக்கத்தில் கடந்த ஜனவரியில் ஹிருதயம் என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது.

இப்படத்தில் பிரபல நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இயக்குனரின் வாழ்வில் சில கால கட்டங்களில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் பல கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.

தர்புகா சிவா: இவர் இயக்கிய முதலும் நீ முடிவும் நீ என்ற திரைப்படம் முழுக்க முழுக்க புதுமுகங்களை கொண்டு எடுக்கப்பட்டு இன்றைய காலகட்ட இளைஞர்களை கவர்ந்த ஒரு திரைப்படம் ஆகும். இப்படத்தின் இயக்குனருக்கு இது தான் முதல் திரைப்படம். அவரின் பள்ளி, கல்லூரிகளில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி மிகவும் எதார்த்தமாக எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்