பாலாஜி மோகன், அனிருத், தனுஷ் கூட்டணியில் 2015-ம் ஆண்டு வெளிவந்த மாரி படம் இசை ரீதியாக மிகப் பெரிய வரவேற்பைப் பெற்ற படம். படத்தில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களும், தீம் மியூசிக், பின்னணி இசை என தன்னுடைய திறமையை அதிகம் வெளிப்படுத்தியிருந்தார் அனிருத்.

இப்போது மாரி படத்தின் இரண்டாம் பாகம் ஆரம்பமாகிவிட்டதாக அறிவித்துவிட்டார்கள். ஆனால், கடந்த சில படங்களாக பிரிந்திருக்கும் அனிருத் – தனுஷ் கூட்டணி மீண்டும் மாரி 2 படத்தில் இணையுமா என அவர்களது ரசிகர்கள் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

வேலையில்லா பட்டதாரி 2 படத்திலும் அனிருத் இசை இல்லாதது பெரும் குறை என தனுஷ் ரசிகர்களே விமர்சித்துவிட்டார்கள்.

கடந்த வாரம் வெளியிடப்பட்ட அந்தப் படத்தின் மேக்கிங் வீடியோவில் கூட முதல் பாகத்தில் அனிருத் இசைத்த தீம் மியூசிக்கைத்தான் பயன்படுத்தியிருந்தார்கள். இதிலிருந்தே அனிருத்தின் இசை எப்படி இருந்தது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

தனுஷ் நடிக்கவுள்ள ‘மாரி 2’ படத்தின் நாயகியாக சாய்பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும்
‘வடசென்னை’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். அதனைத் தொடர்ந்து ‘மாரி 2’ படப்பணிகளில் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார்.

அதிகம் படித்தவை:  சிம்பு படத்தை தொடர்ந்து தனுஷ் படத்திற்கு அடித்த லக்

அக்டோபரில் தொடங்கும் ‘மாரி 2’ படத்தை பாலாஜி மோகன் இயக்க, தனுஷ் தயாரிக்கவுள்ளார். ஒளிப்பதிவாளராக ஓம்பிரகாஷ், முதற்பாகத்தின்
கதாபாத்திரம் போலவே ரோபோ ஷங்கர் மற்றும் வில்லனாக டோவினோ தாமஸ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.

தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாகவுள்ள இப்படத்தின் நாயகி யார் என்பது தெரியாமல் இருந்தது. தற்போது சாய்பல்லவி
நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று படக்குழு திகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

இசையமைப்பாளர் மற்றும் இதர கதாபாத்திரங்களை முடிவு செய்வதில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. மேலும், படப்பிடிப்புக்கான இடங்களைத் தேர்வு செய்யும் பணியிலும் இயக்குநர் பாலாஜி மோகன் ஈடுபட்டு வருகிறார்.

மலையாளத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் தான் பிரேமம்’. இந்தப்படம் அதில் ஹீரோவாக நடித்த
நிவின் பாலியின் ஸ்டார் அந்தஸ்தை உயர்த்தியதுடன், அந்தப்படத்தில் நடித்த மூன்று கதாநாயகிகளான சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் மற்றும் மடோனா செபாஸ்டியன் ஆகிய மூவர் மீதும் புகழ் வெளிச்சம் பாய்ச்சியது.

அதிகம் படித்தவை:  மூன்றரை மணிநேர வெர்ஷனை பார்க்க முடியுமா ? வெற்றிமாறனிடம் கேட்ட இமைக்கா நொடிகள் பட வில்லன் அனுராக் காஷ்யப்.

இதில் சாய் பல்லவிக்கு கொஞ்சம் அதிகப்படியான புகழ் கிடைத்தாலும் மற்ற இருவருக்கும் ஓரளவு பட வாய்ப்புகள் கிடைத்தன.இதில் அனுபமா
பரமேஸ்வரன், தமிழில் தனுஷின் கொடி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.. அதேபோல இன்னொரு நாயகியான மடோனா செபாஸ்டியன்,
விஜய் சேதுபதியுடன் இரண்டு படங்களில் நடித்தவர், தனுஷ் இயக்கத்தில் உருவான பவர் பாண்டி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார்.

இப்போது சாய்பல்லவியும் தனுஷுடன் ‘மாரி-2’ படத்தில் ஜோடியாக நடிக்க இருக்கிறார். ஆக, பிரேமம் நாயகிகள் மூவருடனும் பிரமிக்க  வாய்ப்பு
கிடைத்த ஒரே நடிகர் என்கிற பெருமை தனுஷுக்கு கிடைத்துள்ளது.