எப்பொழுதுமே ரஜினி சிபாரிசு செய்யும் அந்த 3 நடிகர்கள்.. இவர்கள் பெயரை சொன்னாலே இனம் புரியாத நட்பு

ரஜினி கிட்டத்தட்ட 48 வருடங்களுக்கு மேல் சினிமாவில் பயணித்து வருகிறவர் தான் சூப்பர் ஸ்டார். சுமார் 167 படங்களில் நடித்து யாராலையும் இவரை அசைக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு உச்சத்தில் வளர்ந்து இருக்கிறார். இவர் சினிமாவிற்கு வந்த காலத்திலிருந்து இப்போது வரை எத்தனையோ நடிகர் நடிகைகளை பார்த்து வந்திருப்பார்.

ஆனாலும் சில நடிகர்களை இவரால் மறக்க முடியாது என்ற சொல்லும் அளவிற்கு மூன்று பேருடன் நட்பு ரீதியாக பழகி இருக்கிறார். இவர்கள் பெயர் சொன்னால் ரஜினிக்கு ஒரு இனம் புரியாத பிணைப்பு ஏற்பட்டு விடும். அவர்கள் ரஜினியுடன் சேர்ந்து கிட்டத்தட்ட ஆறு படங்களுக்கும் மேல்
இணைந்து நடித்திருக்கிறார்கள்.

Also read: இமேஜ் பார்க்காமல் இணையும் 3 சூப்பர் ஸ்டார்கள்.. ஜெயிலர் வில்லனுக்காக ஓகே சொன்ன ரஜினி

அப்படிப்பட்ட நடிகர்கள் யார் என்றால் சரத்பாபு, நாசர் மற்றும் ரகுவரன். இதில் சரத் பாபு உடன் முள்ளும் மலரும், வேலைக்காரன், அண்ணாமலை, முத்து, பாபா போன்ற பல படங்களிலும் ஒன்றாக இணைந்து நடித்ததால் இவர்களுக்குள் ஒரு நல்ல பிரண்ட்ஷிப் பாலம் ஏற்பட்டுவிட்டது.

அடுத்ததாக நாசர் உடன் சந்திரமுகி, கபாலி, பாபா, படையப்பா, தர்மத்தின் தலைவன், வேலைக்காரன் போன்ற பல படங்களில் நடித்து இவர்கள் இருவருக்கும் ஒரு நல்ல புரிதல் ஏற்பட்டதால் நிஜத்திலும் இவர்களுடைய நட்பு நீடித்துக் கொண்டிருக்கிறது. ரஜினியிடம் வில்லன் கதாபாத்திரத்திற்கு எந்த நடிகர் சூட் ஆகும் என்று கேட்டால் உடனே அவர் நாசர் பெயர் தான் சொல்லுவார் அந்த அளவிற்கு நட்பாக இருக்கிறார்.

Also read: உயிர் நண்பன் சரத்பாபு உடன் ரஜினி வெற்றி கண்ட 6 படங்கள்.. ஜமீன்தாரை வைத்து அம்பலத்தானுக்கு வைத்த ஆப்பு

இதற்கு அடுத்து ரகுவரன் இவர் பெயர் சொன்னாலே நம்முடைய ஞாபகத்துக்கு வருவது ரஜினியின் பாட்ஷா படத்தில் ஆண்டனி கேரக்டர் தான். எந்த அளவுக்கு அந்த படத்தில் ரஜினிக்கு பெயர் கிடைத்ததோ அதுக்கு இணையாகவே ஆண்டனி கேரக்டர் பெயர் பெற்றுவிட்டது. அத்துடன் ரஜினியிடம் உங்களுக்கு தகுந்த வில்லன் யார் என்று கேட்டால் இப்போது வரை அவர் சொல்லக்கூடிய ஒரே நபர் ரகுவரன் தான்.

இப்படி ரஜினியின் நிஜ வாழ்க்கையிலும் இடம் பிடித்த இந்த மூன்று ஹீரோக்கள் எப்பொழுதுமே நம்மளும் மறக்க முடியாத அளவிற்கு இவர்கள் நிலைத்து இருக்கிறார்கள். தற்போது சரத் பாபு மற்றும் ரகுவரன் இல்லாத குறை ரஜினிக்கு மிகவும் ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் அளவிற்கு இருக்கிறது. அதனால் தான் ரஜினிக்கு இவர்கள் பெயரை சொன்னாலே இனம் புரியாத மலரும் நினைவுகள் வந்து விடுகிறது.

Also read: நண்பனின் இழப்பை ஏற்க முடியாத ரஜினி.. சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சரத்பாபு

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்