நடனத்தை வைத்து ஹீரோ வாய்ப்பை பிடித்த 5 நடிகர்கள்.. இயக்குனராகவும் சாதித்த பிரபுதேவா

இன்றைய கால சினிமாவில் நடனம் என்பது ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறது. அந்த நடனத்தால் சினிமாவில் சாதித்த எத்தனையோ நபர்கள் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் நடன திறமை மூலமாக நடிகர்களாகவும் மாறியிருக்கிறார்கள். அவர்கள் யார் என்பதை பற்றி இங்கு காண்போம்.

ராகவா லாரன்ஸ்: ஒரு டான்ஸ் மாஸ்டராக தன்னுடைய சினிமா பயணத்தை ஆரம்பித்த இவர் அதன்பிறகு ஒரு சில திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி தன் திறமையை காட்டி வந்தார். இதன் மூலம் சிறிது சிறிதாக முன்னேறி இன்று தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோவாக இடம் பிடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் காஞ்சனா உள்ளிட்ட திரைப்படங்களையும் இயக்கி இருக்கிறார்.

பிரபுதேவா: டான்ஸ் மாஸ்டரின் மகனான இவரும் சினிமாவில் ஒரு டான்ஸ் மாஸ்டராக தன் பயணத்தை ஆரம்பித்தார். அதன்பிறகு இவர் காதலன் திரைப்படம் மூலம் ஒரு ஹீரோவாக அவதாரம் எடுத்தார். அதிலிருந்து பல வெற்றித் திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் தமிழ் மற்றும் ஹிந்தியில் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.

ராஜுசுந்தரம்: இதயம், ரோஜா உள்ளிட்ட சில திரைப் படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ள இவர் தமிழில் எண்ணற்ற திரைப்படங்களில் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஜீன்ஸ் உள்ளிட்ட பல படங்களில் இவர் ஒரு நடிகராக தன் திறமையை காட்டியிருக்கிறார். அதோடு அஜித், நயன்தாரா நடிப்பில் வெளிவந்த ஏகன் திரைப்படத்தையும் இயக்கி இருக்கிறார்.

ராபர்ட்: சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதன்பிறகு இவர் ஒரு டான்ஸ் மாஸ்டராக மாறி பல திரைப்படங்களிலும் பணிபுரிந்துள்ளார். அதோடு டான்ஸர் உள்ளிட்ட சில திரைப்படங்களில் இவர் வில்லனாகவும் நடித்துள்ளார்.

பரத்: இன்று சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக வலம் வரும் பரத் ஆரம்ப காலத்தில் தன்னுடைய நடனத்தின் மூலம் தான் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அற்புதமாக டான்ஸ் ஆட கூடிய இவர் பல டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றிருக்கிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்