புதன்கிழமை, நவம்பர் 13, 2024

இந்த வாரம் நாமினேஷனில் சிக்கிய நவகிரகங்கள்.. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவாரா தாய்க்கிழவி.?

Biggboss 8: பிக்பாஸ் வீட்டை விட்டு நேற்று தர்ஷா குப்தா வெளியேற்றப்பட்டார். கிட்டத்தட்ட 5 லட்சம் வரை சம்பாதித்து விட்டு சென்றுள்ள அவரைத் தொடர்ந்து இந்த வாரம் எந்த பீஸ் வெளியேறப் போகிறது என்ற ஆர்வம் அனைவருக்கும் இருக்கிறது.

அதேபோல் வீட்டில் இருக்க இவருக்கு தகுதி கிடையாது என பார்வையாளர்கள் சிலரை கட்டம் கட்ட காத்திருக்கின்றனர். அந்த வகையில் தற்போது நடந்து முடிந்துள்ள நாமினேஷனில் ஒன்பது பேர் சிக்கி இருக்கின்றனர்.

அதன்படி ஜாக்லின், அருண், ரஞ்சித், சத்யா, பவித்ரா, சுனிதா, ஜெஃப்ரி, அன்சிதா, தீபக் ஆகியோர் மற்ற போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இதில் தான் செய்றது மட்டும் தான் சரின்னு நினைக்கிறாங்க. ஒரு குரூப்பா இருக்காங்க. இன்னும் விளையாட்டா விளையாட ஆரம்பிக்கல போன்ற காரணங்கள் சொல்லப்பட்டது.

நாமினேஷனில் சிக்கிய நவகிரகங்கள்

நிச்சயம் வீட்டில் இருப்பவர்களுக்கு தங்களை தான் சொல்லி இருக்கிறார்கள் என்பது தெரியும். அதனால் இந்த வாரம் விளையாட்டின் போக்கு முற்றிலும் மாறுபடவும் அதிக வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் இரண்டு அணியில் இருந்தும் கணிசமான ஆட்கள் குறைந்துள்ளனர்.

அதனால் மற்றவர்கள் தங்களுடைய திறமையை காட்ட வேண்டிய நேரமும் இதுதான். அதற்கு ஈடாக டாஸ்க்குகளும் கடினமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்த வாரம் அன்ஷிதா அல்லது சுனிதா வெளியேறுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

ஏனென்றால் இவர்களுக்கான ரசிகர்கள் வட்டம் இப்போது குறைவாக இருக்கிறது. அதேபோல் சுனிதாவை தாய் கிழவி முதலில் வீட்டை விட்டு வெளியேறு என பார்வையாளர்கள் கூறி வருகின்றனர். அதனால் தர்ஷா சொல்லியது போல் இவர் கூட பார்வையாளர்களின் டார்கெட்டாக இருக்கலாம்.

- Advertisement -spot_img

Trending News