90ஸ் கிட்ஸை பீதியடைய வைத்த 5 திகில் சீரியல்கள்.. டைட்டில் பாடலைக் கேட்டே காய்ச்சலில் விழ வைத்த கருப்பு

5 Horror Serials: இப்போதெல்லாம் சீரியல்கள் எல்லாம் ஒரே மாதிரி சாயலில் தான் இருக்கிறது. குடும்பத்தை பிரிப்பது, திருமணமானவரை காதலிப்பது என பெண்கள் செய்யாத வில்லத்தனமே கிடையாது. அதனாலேயே சீரியல் பார்க்கும் ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.

ஆனால் 90 காலகட்டத்தில் வெளிவந்த சீரியல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும். நகைச்சுவை, குடும்பம், திகில், மர்மம் என பல வெரைட்டியான சீரியல்களை அன்றைய தலைமுறையினர் பார்த்ததுண்டு.

அதை இப்போதும் கூட யாராலும் மறக்க முடியாது. அப்படி 90ஸ் பிள்ளைகளை பீதி அடைய வைத்த ஐந்து திகில் சீரியல்கள் பற்றி இங்கு காண்போம்.

பஞ்சமி: சன் டிவியில் ஒளிபரப்பான இந்த சீரியல் அவ்வளவு திகிலாக இருக்கும். பழங்குடி மக்கள் வாழ்ந்த காடு மலை சார்ந்த பகுதி தான் இந்த சீரியலின் கதைக்களம். அந்த பகுதி சாயந்தரம் 3 மணி ஆனாலே இருள் சூழ்ந்துவிடும்.

அதன் பிறகு பஞ்சமி வேட்டை ஆரம்பிக்கும். இதன் டைட்டில் பாடலே அவ்வளவு திகிலாக இருக்கும். இதை பார்த்து பயப்படாத 90ஸ் கிட்ஸ்களே கிடையாது.

திருப்பமும் விறுவிறுப்பும் கலந்த சீரியல்

ஜென்மம் X: விஜய் டிவியில் ஒளிபரப்பான இந்த சீரியலின் டைட்டில் பாடல் வேற லெவல் பயத்தை கொடுக்கும். இந்தப் பாடலை மட்டுமே கேட்டு காய்ச்சலில் விழுந்த குழந்தைகள் ஏராளம். கட்டை குரலில் ஜென்மம் எக்ஸ் என வந்து மிரட்டும் அந்த பாடலை இப்போதும் மறக்க முடியாது. அதேபோல் தான் சீரியலும் கொலை நடுங்க வைக்கும்.

விடாது கருப்பு: 90 காலகட்டத்தில் அனைவரையும் கவர்ந்த ஒரே சீரியல்தான் மர்ம தேசம். சீரிஸ் பாணியில் வெளிவந்த ஒரு பார்ட் தான் விடாது கருப்பு. வெள்ளை குதிரையில் வரும் கருப்பு தப்பு செய்தவர்களை தண்டிக்கும் என்ற கதையோட்டத்தில் இருக்கும் இந்த சீரியல்.

அந்த குதிரை சத்தமும் கருப்பு உருவமும் பார்க்கும் போதே திகிலை கிளப்பும். ஆனாலும் அம்மா புடவையில் முகத்தை மறைத்துக் கொண்டு பார்த்த நினைவுகளை இப்போதும் மறக்க முடியாது.

ருத்ர வீணை: சன் டிவியில் வெளிவந்த இந்த சீரியலின் கதையே வீணையை வைத்து தான் இருக்கும். அந்த வீணையை வாசித்தால் மழை வரும், கேட்டது கிடைக்கும் என ஒவ்வொரு காட்சியும் சுவாரசியமாக நகரும். இந்த சீரியலை தற்போது பார்க்க வேண்டும் என நீங்கள் நினைத்தால் ராதிகாவின் ராடான் மீடியா யூடியூப் சேனலில் பார்க்கலாம்.

மந்திரவாசல்: ராஜ் டிவியில் ஒளிபரப்பான இந்த சீரியலின் டைட்டில் பாடலை இசை அமைத்தது டி இமான். விறுவிறுப்பாகவும் திரில்லிங்காகவும் நகர்ந்த இந்த சீரியலை இப்போதும் மறக்க முடியாது. அந்த அளவுக்கு 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் லிஸ்டில் இது இருக்கிறது.

இது தவிர அது மட்டும் ரகசியம், நிஷா காந்தி என பல திகில் சீரியல்கள் அந்த காலகட்டத்தில் வெகு பிரபலம். ஆனால் காலம் மாற மாற இப்போது சின்னத்திரை சேனல்கள் ஒளிபரப்பும் சீரியல்கள் அனைத்தும் வெறும் குப்பையாக மட்டுமே இருக்கிறது.

மறக்க முடியாத திகில் சீரியல்கள்

Next Story

- Advertisement -