நடிகை மோகத்தில் கேரியரை தொலைத்த 5 ஹீரோக்கள்.. அப்பா எட்டடி பாய்ந்தார், குட்டி பதினாறடி பாய்ந்தது

சினிமாவை பொறுத்தவரை உழைப்பும், அதிர்ஷ்டமும் இருந்தால் மட்டும் பத்தாது ஈடுபாடும் இருந்தால் தான் நிலைத்து நிற்க முடியும். அந்த வகையில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் பல தடைகளை கடந்து சாதித்த ஏராளமான நடிகர்கள் இருக்கின்றனர்.

ஆனால் சினிமா பின்புலம் இருந்தும் வாய்ப்புகள் தேடி வந்தும் கேரியரை தொலைத்த சில நடிகர்களும் இருக்கிறார்கள். அப்படி நடிகைகள் மேலுள்ள மோகத்தால் சினிமா வாழ்க்கையை இழந்த சில நடிகர்களை பற்றி இங்கு விரிவாக காண்போம்.

கார்த்திக் நடிகர் முத்துராமனின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவிற்குள் நுழைந்த கார்த்திக் நவரச நாயகன் என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். காதல் மற்றும் ரொமாண்டிக் திரைப்படங்களில் அதிகம் நடித்திருக்கும் கார்த்திக் நிஜ வாழ்வில் கூட காதல் மன்னன் தான்.

அந்த வகையில் இவர் நடிகை ராகினியை காதலித்து மணந்து கொண்டார். அதன் பிறகு சில வருடங்களில் அவரின் தங்கையையும் திருமணம் செய்து கொண்டார். இப்படி ஒன்றுக்கு இரண்டாக மனைவிகள் இருந்தும் பல நடிகைகளுடன் இவர் கிசுகிசுக்கப்பட்டார். இப்படி நடிகைகளுடன் தொடர்பு, குடிபோதை போன்ற காரணத்தினால் இவர் சில காலங்களில் சினிமா கேரியரை தொலைத்தது குறிப்பிடத்தக்கது.

கரண் இந்த கேரக்டர் மட்டும்தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்கும் நடிகர்களுக்கு மத்தியில் எந்த கேரக்டர்கள் கொடுத்தாலும் அதை கச்சிதமாக செய்யக்கூடிய ஒரே நடிகர் கரண் மட்டும் தான். அந்த வகையில் இவர் வில்லன், குணச்சித்திரம், ஹீரோ என்று அனைத்து கேரக்டர்களிலும் நடித்துள்ளார்.

பல வருடங்களாக சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த இவர் சில வருடங்களாக என்ன ஆனார் என்றே தெரியாமல் இருந்தது. இதற்கு பின்னால் ஒரு பெண் தான் காரணமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதாவது கரண் ஒரு பெண்ணுடன் இருந்த தொடர்பின் காரணமாகத்தான் சினிமாவை கவனிக்காமல் விட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.

சரவணன் 90 காலகட்டத்தில் பல திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் சில வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவை விட்டு காணாமல் போனார். அதன் பிறகு நந்தா திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த இவர் பருத்திவீரன் திரைப்படத்திற்கு பிறகு அதிக படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

ஒரு ஹீரோவாக இருந்து தற்போது குணச்சித்திரம், வில்லன் வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவருக்கு சில நடிகைகளுடன் தொடர்பு இருந்ததால் தான் சினிமா வாய்ப்பு பறிபோனதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதும் பெண்கள் குறித்து சில கருத்துக்களை வெளியிட்டது தொடர்பாக சில சர்ச்சைகளை சந்தித்தார்.

கௌதம் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக்கின் மகனான இவர் நடிக்க வந்த புதிதில் பல திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு சக நடிகைகளுடன் நெருக்கமாக பழகி வந்த இவர் சமீபத்தில் மஞ்சிமா மோகனை திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியானது.

அவரும் கிட்டத்தட்ட இதை உறுதிப்படுத்திய நிலையில் சம்பந்தப்பட்ட நடிகை இதை திட்டவட்டமாக மறுத்தார். இதுவே திரையுலகில் பல சலசலப்பை ஏற்படுத்தியது. அது மட்டுமல்லாமல் அப்பாவை போன்று தான் பிள்ளையும் என்று வெளிப்படையாகவே பேச ஆரம்பித்தனர். தற்போது இவர் சில தோல்வி படங்களை கொடுத்துவிட்டு வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்.

அதர்வா முரளி நடிகர் முரளியின் மகனான இவர் பரதேசி உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கிறார். ஆயினும் இவரின் நடிப்பில் சமீப காலமாக வெளிவரும் திரைப்படங்கள் எதுவும் அவ்வளவாக வெற்றி பெறவில்லை. இதற்கு காரணம் இவர் நடிகைகளுடன் டேட்டிங் போன்ற விஷயங்களில் ஆர்வம் காட்டியதுதான்.

இதன் காரணமாக இவருக்கு இனி சினிமா வாழ்வு அவ்வளவுதான் என்று கிசுகிசுக்கப்பட்டது. ஆனாலும் தற்போது சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தவில்லை.

Next Story

- Advertisement -