பாக்ஸ் ஆபிஸை கலக்கும் 5 படங்கள்.. தரமான சம்பவம் செய்த திருச்சிற்றம்பலம்

சமீபத்தில் வெளியான பிரபல நடிகர்களின் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற வருகிறது. அந்த வகையில் அந்த படங்களின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனும் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கிறது. வார நாட்களை விட வார இறுதியில் அது இன்னும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் வார இறுதி பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனில் முதல் ஐந்து இடங்களை பிடித்த திரைப்படங்களை பற்றி இங்கு காண்போம்.

சீதா ராமம் துல்கர் சல்மான், மிருனால் தாகூர், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் தற்போது நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆகஸ்ட் 5ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் கலெக்ஷனில் நல்ல லாபம் பார்த்துள்ளது. அந்த வகையில் இப்படம் தற்போது ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.

Also read:கோடிகளை இறைக்கும் திருச்சிற்றம்பலம்.. வசூல் சக்கரவர்த்தியாக தனுஷ்

விருமன் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியான இந்த படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருந்தது. முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி சங்கர், நடித்திருந்த இப்படத்தை சூர்யா தயாரித்திருந்தார். மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இப்படம் தற்போது வசூலிலும் சக்கை போடு போட்டு வருகிறது. அந்த வகையில் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் நான்காம் இடத்தை பிடித்துள்ளது.

லிகர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே நடித்திருக்கும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியானது. படம் வெளியான முதல் நாளிலேயே ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தது. இதனால் இந்த படத்தின் வசூல் குறையும் என்ற நிலையும் ஏற்பட்டது. ஆனால் வார இறுதியில் இந்த படத்திற்கு ரசிகர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. அந்த வகையில் தற்போது இப்படம் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

Also read:12 வருடங்களில் ஐந்து முறை நேருக்கு நேராக மோதிய தனுஷ், கார்த்தி.. அதிகமா கல்லா கட்டியது யார் தெரியுமா?

டைரி இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் அருள்நிதி, கிஷோர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த இந்த படத்திற்கு தற்போது நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. ஆகஸ்ட் 26 அன்று வெளிவந்த இந்த திரைப்படம் தற்போது வசூலிலும் ஏறுமுகமாக இருக்கிறது. அந்த வகையில் ரசிகர்களை கவர்ந்த இந்த த்ரில்லர் திரைப்படம் தற்போது இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

திருச்சிற்றம்பலம் தனுஷ், நித்யா மேனன், பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதை சற்றும் பொய்யாக்காமல் இப்படம் தற்போது வசூல் வேட்டையில் முன்னிலையில் இருக்கிறது. கடந்த சில தோல்வி படங்களை கொடுத்து வந்த தனுசுக்கு இந்த படம் ஒரு தரமான வெற்றியை கொடுத்திருக்கிறது.

அந்த வகையில் ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளிவந்த இந்த திரைப்படம் தற்போது பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் 100 கோடியை நெருங்கும் நிலையில் இருக்கிறது. அந்த அளவுக்கு இந்த படத்திற்கு ரசிகர்கள் தங்கள் ஆதரவை அள்ளிக் கொடுத்துள்ளனர். இதனால் தனுஷ் தற்போது மற்ற திரைப்படங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்து மாஸ் காட்டி வருகிறார்.

Also read:கார்த்தியை ஹீரோவாக்க தயங்கிய மணிரத்னம்.. 18 வருடத்திற்கு முன்பே கைநழுவி போன வாய்ப்பு

Next Story

- Advertisement -