புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

கொத்தாக நாமினேஷனில் சிக்கிய 11 போட்டியாளர்கள்.. சூனியம் வைக்க தயாராகும் ஆடியன்ஸ்

Biggboss 8: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஐந்து புது போட்டியாளர்கள் வீட்டுக்குள் வந்திருக்கின்றனர். இதனால் பழைய போட்டியாளர்களின் மனநிலை கொஞ்சம் பதட்டமாக தான் இருக்கிறது.

அதிலும் இன்று ஓப்பன் நாமினேஷன் நடந்திருக்கிறது. அதில் 11 பேர் வசமாக சிக்கி இருக்கின்றனர். இதனால் வீடு கலவரமும் சலசலப்புமாக தற்போது மாறி உள்ளது.

அந்த வகையில் ஜாக்லின், விஷால், ரஞ்சித், அருண், முத்து, தீபக், சாச்சனா, பவித்ரா, ஆனந்தி, சுனிதா, அன்சிதா ஆகியோர் நாமினேஷனில் இருக்கின்றனர். இதில் யார் இந்த வாரம் வெளியேறப் போகிறார்கள் என்ற பதட்டம் போட்டியாளர்களுக்கு அதிகமாக இருக்கிறது.

இந்த வாரம் நாமினேஷனுக்கு வந்த 11 பேர்

அதேபோல் முத்துவை எப்படியாவது தோற்கடித்து வெளியே அனுப்ப வேண்டும் என தர்ஷிகா வில்லத்தனமாக திட்டமிடுகிறார். அவனுடைய விளையாட்டு வேற மாதிரி இருக்கிறது.

அடுத்த முறை நாமினேஷனுக்கு வரும்போது முகத்தில் அடிச்ச மாதிரி ஒரு காரணத்தை சொல்ல வேண்டும் என திட்டம் தீட்டுகிறார். மறுபக்கம் பவித்ராவை தூண்டி விடுகிறார் புதிதாக வந்திருக்கும் சிவகுமார்.

இப்படி கலவர பூமியாக மாறி இருக்கும் பிக் பாஸ் வீட்டில் இந்த வார டாஸ்க் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் ஒரு வழியாக ஆனந்தி நாமினேஷனில் சிக்கிவிட்டார். அவரை இந்த வாரம் தூக்க வேண்டும் என ஆடியன்ஸ் ஒரு பக்கம் தீயாக வேலை பார்க்க தொடங்கிவிட்டனர்.

- Advertisement -

Trending News