theri-vijay-stillஇளைய தளபதி விஜய் நடிப்பில் தெறி படம் ஏப்ரல் 14ம் தேதி வெளிவரவுள்ளது. ஆனால், இப்படத்தின் டிக்கெட் விலையை காரணம் காட்டி பல திரையரங்குகள் படத்தை எடுக்க முன்வரவில்லை.

இதில் குறிப்பாக கோயமுத்தூர் மற்றும் செங்கல்பட்டில் இன்று மதியம் வரை பேச்சு வார்த்தை நடந்தது. சமீபத்தில் வந்த தகவலின்படி கோயமுத்தூரில் அரசாங்கம் நிர்ணயித்த தொகைக்கே டிக்கெட் விற்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

தற்போது கோயமுத்தூரில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.ஆனால், செங்கல்பட்டில் தற்போது வரை இழுப்பறியிலேயே உள்ளது, இதனால், பல முக்கிய திரையரங்கில் இன்னும் தெறி உறுதிப்படுத்தப்படவில்லை.