News | செய்திகள்
50 நொடிகள் ஓடக்கூடிய ‘தெறி’ டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விஜய் நடித்துவரும் தெறி படத்தின் டீசர் குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் சில காரணங்களால் இன்று இப்படத்தின் டீசர் வெளியாகவில்லை.
இந்நிலையில் 50 நொடிகள் ஓடக்கூடிய இப்படத்தின் டீசர் வரும் பிப்ரவரி 5-ம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது. தற்சமயம் இதற்கான பணிகளில் இயக்குனர் அட்லி தீவிரமாக இயங்கி வருகிறார்
