தெறி படைத்த உலக சாதனை பொய்யா ? சர்ச்சையை கிளப்பும் ரிப்போர்ட் - Cinemapettai
Connect with us

Cinemapettai

தெறி படைத்த உலக சாதனை பொய்யா ? சர்ச்சையை கிளப்பும் ரிப்போர்ட்

News | செய்திகள்

தெறி படைத்த உலக சாதனை பொய்யா ? சர்ச்சையை கிளப்பும் ரிப்போர்ட்

தெறி படத்தின் டீசர் கடந்த 5ம் தேதியன்று நள்ளிரவு வெளியானது.இதுவரை தெறி டீசருக்கு 2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்துள்ளன

லைக்குகளைப் பொறுத்தவரையில் தெறி டீசர்  உலக அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளதாக நேற்று சமூக வலைத்தளங்களில் ஒரு மீம் பரவியது. அதில் அவஞ்சர் திரைப்படத்தின் டீசர் முதலிடத்திலும், ஜுராசிக் வேர்ல்டு டீசர் இரண்டாவது இடத்திலும், தெறி டீசர் மூன்றாவது இடத்திலும் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அது உண்மைதானா என நாம் அலசிய போது கிடைத்த தகவல்கள்.

theri-teaser-likes

அவஞ்சர்ஸ் – ஏஜ் ஆப் அல்ட்ரான்ஸ் டீசர் கடந்த 2014ம் ஆண்டு யு டியூபில் வெளியிடப்பட்டது. இந்த டீசரை இதுவரை 7 கோடியே 84 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். 5 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை இந்த டீசர் பெற்றுள்ளது.

ஜுராசிக் வேர்ல்டு டிரைலர் 2014ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. இதை இதுவரை 7 கோடியே 93 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். 3 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் இதற்குக் கிடைத்துள்ளன.

ஆனால், தெறி டீசரை இதுவரை 63 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள்தான் பார்த்துள்ளனர். அதற்குள் லைக்குகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 40 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. அவஞ்சர்ஸ், ஜுராசிக் வேர்ல்டு ஆகியவற்றின் டீசர், டிரைலர் பார்வையாளர்கள் 7 கோடியைத் தாண்டியுள்ளனர். ஆனால், தெறி டீசரின் பார்வையாளர்கள் 63 லட்சத்தைத்தான் தாண்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் டீசர், டிரைலர் என்ற விதத்தில் தெறி டீசரின் சாதனையைக் கவனிக்கும் அதே சமயத்தில் கொல வெறியின் சாதனையையும் நாம் மறந்துவிட முடியாது. கொல வெறி பாடல் 2011ல் வெளியானது. இதுவரை 10 கோடியே 25 லட்சம் பேர் இந்த பாடலை பார்த்து ரசித்துள்ளனர். இதுவரை 3 லட்சத்து 95 ஆயிரம் லைக்குகள் இந்தப் பாடலுக்குக் கிடைத்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top