தெறி படத்தின் டீசர் வரும் வரை அது வேதாளம் பட டீசர் சாதனையை முறியடிக்குமா என்று விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், டீசர் வெளியான அன்று நள்ளிரவில் கூட விஜய் ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்து விடாமல் லைக் பட்டனை அழுத்தியதால் அன்றே 1 லட்சம் லைக்குகளைக் கடந்து தெறி டீசர் சாதனை படைத்தது. அடுத்த சில நாட்களில் 2 லட்சம் லைக்குகளைக் கடந்து இந்தியத் திரையுலகில் புதிய சாதனையை படைத்தது.

அதிகம் படித்தவை:  அதிர்ச்சி கலந்த எதிர்பார்ப்பை உண்டாகிய விவேகம் படத்தின் புதிய புகைபடம் வெளியானது

தற்போது 60 லட்சம் ஹிட்ஸ்களைக் கடக்க உள்ள தெறி டீசர் விரைவில் வேதாளம் டீசரின் ஹிட்ஸ் சாதனையை முறியடிக்க உள்ளது. வேதாளம் டீசரை இதுவரை 63 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்திருக்கிறார்கள். அடுத்த சில நாட்களில் அந்த சாதனையை தெறி டீசர் முறியடித்து விடும். வேதாளம் டீசர் 60 லட்சம் ஹிட்ஸைக் கடக்க 4 மாதங்கள் ஆகியிருக்கிறது. ஆனால், தெறி டீசர் அந்த சாதனையை ஆறே நாட்களில் முறியடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் படித்தவை:  இளம் பெண்ணை மிரட்டிய ரவுடியை கொலை செய்த விஜய் ரசிகர் மன்ற தலைவர்? அதிர்ச்சி தகவல் !

டீசரிலேயே மிகப் பெரிய சாதனையைப் படைத்து வரும் தெறி படம் அடுத்து இசை வெளியீட்டிலும், டிரைலர் வெளியீட்டிலும் மேலும் சில சாதனைகளைப் படைக்கும் என விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.