theri-vijayதெறி படத்தை காண பல லட்ச ரசிகர்கள் வெயிட்டிங். ரசிகர்கள் திரையரங்கு முன்பு பேனர், போஸ்டர், கட் அவுட் என வைத்து கலக்கி வருகின்றனர்.இந்நிலையில் இப்படத்தின் கதை இது தான் என சமூக வலைத்தளத்தில் ஒரு செய்தி பரவி வருகின்றது.

இதில் ‘விஜய் கேரளாவில் ஒரு பேக்கிரி நடத்தி வருகிறார். தன் மகளுடன் சந்தோஷமாக அந்த வாழ்ந்து வர, சைலண்டாக சில அதிரடி வேலைகளை செய்கிறார்.இங்கு எமி ஜாக்ஸனுக்கு விஜய் மேல் காதல் என இது ஒரு பக்கம் போக, விஜய்யை தேடி வில்லன் மகேந்திரன் கும்பல் கேரளாவிற்கே வருகிறது.

அந்த அவர்களை அடித்து தும்சம் செய்ய, மகேந்திரனுக்கும், விஜய்க்கு என்ன பகை என்பது பிளாஷ்பேக்காக ஆரம்பிக்கின்றது.நேர்மையான போலிஸ் அதிகாரியாக விஜயகுமார் என்கின்ற விஜய், மகேந்திரன் செய்யும் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து அனைத்தையும் தட்டிக்கேட்க, இவரை அடக்க, விஜய்யின் காதல் மனைவி சமந்தாவை கொல்கிறார்கள்.

இதன் பிறகு தான் அவர்களை விட்டு ஒதுங்க நினைக்கும் விஜய் கேரளாவிற்கு வருகிறார். ஆனால், விஜய் இருப்பதை அறிந்துக்கொண்ட மகேந்திரன் கும்பல் விஜய்யின் மகள் நைனிகாவை கடத்துகின்றது, விஜய் தன் மூன்றாவது கெட்டப்பில் வட இந்தியாவில் வில்லன் கும்பலிடமிருந்து நைனிகாவை காப்பாற்ற ஆடும் ருத்ரதாண்டவம் தான் கிளைமேக்ஸ்’ என ஒரு கதை சமூக வலைத்தளங்களை சுற்றி வருகின்றது. சரி..இது அட்லீக்கு தெரியுமா?.