sachin

தமிழ் சினிமாவில் தனக்கென பெரும் ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர் நடிகர் விஜய். தனது 18வது வயதில் ‘நாளைய தீர்ப்பு’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர்.

‘செந்தூர பாண்டியன்’ படத்தில் ‘இளைய நட்சத்திரம் விஜய்’ என்றுதான் டைட்டில் கார்டு போட்டார்கள். அந்த காலகட்டத்தில், ரஜினியின் ‘தளபதி’, ஸ்டாலினின் அடைமொழி என ‘தளபதி’ என்ற பெயரே ஊர் முழுக்க பெரும் பரபரப்பில் இருந்தது.

sachin

எனவே விஜய்யின் ரசிகர்கள், 20 வயது இளைஞனான விஜய்க்கு ‘இளைய தளபதி’ என பட்டம் சூட்டி மகிழ்ந்தார்கள். அடுத்து ரிலீசான `ரசிகன்’ படத்திலேயே `இளைய தளபதி விஜய்’ என டைட்டில் கார்டு போட்டனர்.

இளையதளபதி விஜய் இதுவரை நடித்த படங்களில் பலருக்கு பேவரெட் படங்கள் இருக்கிறது. அதிலும் விஜய், ஜெனிலியா இணைந்து நடித்த சச்சின் படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படம்.

அதிகம் படித்தவை:  #HappyBirthdaySachin கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் 44-வது பிறந்தநாள் இன்று
sachin

ரொம்ப நாட்களுக்குப் பிறகு விஜய் நடித்திருந்த ஒரு முழு காதல் – காமெடி படம். படத்திற்குப் படம் வித்தியாசமான ஓப்பனிங் கொடுக்கும் விஜய் இதிலும் அசத்தியிருக்கிறார் – சாதாரணமாக அறிமுகமாகி.

ஊட்டி கல்லூரியையே கலக்கும் ஜெனிலியாவிடம் ” நான் உன்னை காதலிக்கிறேன்.. இன்னும் 30 நாளில் நீயும் உன் காதலை ஒத்துக்கொள்வாய் பார்” என்று சவால் விடுகிறார் விஜய்.

sachin

உள்ளுக்குள் விஜய் மீது உண்டான காதலை மறைத்துக்கொண்டு அவரிடம் வம்பு செய்துகொண்டிருக்கிறார் ஜெனிலியா. ஏன் காதலைச் சொல்லவில்லை என்று கேட்கும் தோழியிடம், 30 நாளில் காதலைச் சொன்னால் நான் தோற்றவளாகிவிடுவேன்.

அதனால் 31வது நாள் போய் என் காதலை அவனிடம் சொல்வேன் என்கிறார் ஜெனிலியா. ஆனால் அந்த 31வது நாள் நடக்கும் ஒரு விஷயம் அவரது காதலை விஜயிடம் சொல்லமுடியாமல் போகிறது.

விஜயும் தன் காதல் தோற்றதை எண்ணி சொந்த ஊருக்குத் திரும்புகிறார். முடிவில் ஜெனிலியா – விஜய் காதல் கதை என்ன ஆனது? இதுவே சச்சின்..

அதிகம் படித்தவை:  பிரபல பாடகிக்கு ரசிகனான சச்சின் டெண்டுல்கர்! ஷாக் மொமண்ட்
sachin

இப்படத்தை இயக்குனர் மகேந்திரன் அவர்களின் மகன் ஜான் தான் இயக்கியிருந்தார். அண்மையில் ஒரு பேட்டியில் மகேந்திரன் அவர்கள், என் மகன் இயக்கிய சச்சின் படத்தில் விஜய் நிறைய இடத்தில டைவர்ட் ஆகி ஒரு இடத்திற்கு வருவார்.

அங்கே மழையில ஜெனிலியாவைப் பார்ப்பார், அந்த காட்சி எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

sachin

இப்படம் குறித்து விஜய் தெறி படப்பிடிப்பில் என்னிடம், நான் சச்சின் படத்தில் வேற மாதிரி நடிக்கலாம் என்று இருந்தேன். ஆனால் படப்பிடிப்பில் உங்களது மகன் கதையை சொல்லும் போதே நன்றாக நடித்து காட்டுவார்.

அவரின் நடிப்பை பார்த்து அப்படியே நான் காப்பியடித்து நடித்தேன் சார் என விஜய் விளையாட்டாக கூறியதாக கூறியுள்ளார்.