அட்லி இயக்கத்தில், விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடித்துள்ள, தெறி படத்தின் படப்பிடிப்பு, சமீபத்தில் முடிவடைந்துள்ளது. இதற்கு அடையாளமாக, கடைசி நாள் படப்பிடிப்பின் போது, படக்குழு சார்பில் பூசணிக்காயும் உடைக்கப்பட்டு விட்டதாம். படத்தின் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ், இந்த தகவலை, தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். போக்கிரி, ஜில்லா ஆகிய படங்களை தொடர்ந்து, தெறி படத்திலும், போலீஸ் அதிகாரி வேடத்தில் விஜய் நடித்திருந்தாலும், அந்த படங்களை விட, இதில், விஜயின் கேரக்டர் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்கிறார், அட்லி. இந்த படத்தின் சண்டை காட்சிகளில், டூப் போடாமல் நடித்துள்ளாராம் விஜய்.