vijay-theriஅட்லி இயக்கத்தில் ‘இளையதளபதி’ விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடித்திருக்கும் தெறி திரைப்படம் வரும் ஏப்ரல் 14-ம் தேதி உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமான முறையில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் ஒருநாள் முன்பாக அதாவது ஏப்ரல் 13 இரவு 8 மணிக்கு இப்படத்தின் பிரீமியர் காட்சி திரையிடப்படவுள்ளதாம். அமெரிக்காவில் இப்படத்தை பிரபல சினி கேலக்ஸி நிறுவனம் வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.