theri-memesஇளையதளபதி விஜய் நடிப்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள ‘தெறி’ படத்தின் டீசர் நேற்று வெளியாகி விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களின் பாராட்டை பெற்றுள்ளது. இந்நிலையில் டீசருக்கு கிடைத்துள்ள வரவேற்பை அடுத்து ‘தெறி’ படத்தின் ரிலீஸ் உரிமையை பெற முன்னணி விநியோகிஸ்தர்கள் போட்டி போட்டு விலையை ஏற்றி வருவதாக கூறப்படுகிறது.

‘துப்பாக்கி’ படத்திற்கு சமமாக அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்பதால் ‘துப்பாக்கி’ படத்திற்கு இணையாக இந்த படமும் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகளின் இடையூறும் இருக்காது என்றே கூறப்படுகிறது. எனவே ‘தெறி’ படத்தின் பிசினஸ் எகிறி வருவதாகவும் இதன் காரணமாக தயாரிப்பாளர் மிகுந்த சந்தோஷத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகவுள்ள இந்த படத்தின் பிசினஸ் இன்னும் ஒருசில வாரங்களில் முற்றிலும் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்-அட்லி கூட்டணியில் விஜய் ரசிகர்களுக்கு தமிழ்ப்புத்தாண்டில் ஒரு ஆக்சன் விருந்து காத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.