விஜய் நடிப்பில் உருவாகியுள்ள தெறி படத்தின் டீசர் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு வெளியானது. பெரிய எதிர்பார்ப்புகளிடையே வெளிவந்த இந்த டீசரை விஜய் ரசிகர்களை திருப்திபடுத்தும்விதமாக அமைந்துள்ளது எனலாம்.

50 விநாடிகள் ஓடக்கூடிய இந்த டீசரை முழுக்க முழுக்க விஜய்யை மையப்படுத்தியே உருவாக்கியிருக்கிறார்கள். ரசிகர்கள் விஜய்யை எந்த மாதிரி படத்தில் எதிர்பார்ப்பார்களோ அந்த எதிர்பார்ப்புகளையெல்லாம் இந்த டீசர் மூலம் பூர்த்தி செய்துள்ளார் இயக்குனர் அட்லி.

அதிகம் படித்தவை:  விஜய்யுடன் மோதும் 4 வில்லன்கள்- புதிய தகவல்

டீசரின் ஒவ்வொரு பிரேமிலும் விஜய்யை வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கிறார். ஒரு ரசிகர் விஜய்யை வைத்து படம் எடுத்தால் எப்படியெல்லாம் எடுப்பாரோ? அந்தளவுக்கு இந்த படத்தை அட்லி ரொம்பவும் ரசித்து எடுத்திருப்பார் என்பது டீசரை பார்க்கும்போதே தெரிகிறது.

அதிகம் படித்தவை:  தெறி இசை வெளியீட்டு விழா - வதந்திக்கு முற்று புள்ளி

இந்த டீசர் யூடியூப்பில் வெளியாகி சில மணி நேரங்களிலேயே 5 லட்சத்துக்கும் அதிகமானோர் இதை கண்டுகளித்துள்ளனர். தற்போதுவரை 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த டீசரை பார்த்துள்ளனர்.

ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 1 லட்சம் ரசிகர்கள் இந்த டீசரை கண்டுகளித்து வருகின்றனர். விரைவில், அனைத்து டீசர் சாதனைகளையும் தெறி முறியடிக்கும் என நம்பலாம்.