சமுக வலைத்தளங்களில் தீயாக பரவும் ‘தெறி’ படத்தின் கதை

theri-vijayஇளைய தளபதி விஜய் நடிப்பில், அட்லீ இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படம் தெறி. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 20ம் தேதி பிரமாண்டமாக நடக்கவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் கதை இது தான் என சமூக வலைத்தளங்கள் மற்றும் வாட்ஸ் அப்புகளில் சில செய்திகள் உலா வருகின்றது.இதில் ‘விஜய், சமந்தா இருவரும் கணவன், மனைவி இவர்களின் குழந்தையாக நைனிகா.

விஜய்க்கு ஏற்படும் ஒரு பிரச்சனையால் வில்லன் கும்பல் சமந்தாவை கொலை செய்கிறது.இதனால், தன் நண்பர் ஒருவரிடம் தன் குழந்தையை ஒப்படைத்துவிட்டு வில்லனை தெறியாக பழி வாங்குகிறார் விஜய்’ என ஒரு கதை உலா வருகின்றது. ஆமா, இது அட்லீக்கு தெரியுமா?.