vijay-theriவிஜய் நடித்த ‘புலி’ படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் அடுத்து திரைக்கு வரவுள்ள ‘தெறி’ படத்துக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் இம்மாதம் 20ம் தேதி நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது.

ஏப்ரல் 14ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய எண்ணியிருந்தனர். ஆனால் பட ரிலீஸை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைக்கும்படி விஜய் கேட்டுக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.‘தலைவா’ உள்ளிட்ட சில படங்களில் அரசியல் வசனம் இருப்பதாக பரவிய தகவலால் அப்படத்தை வெளியிடுவதில் அரசியல் குறுக்கீடு ஏற்பட்டது.

விரைவில் தேர்தல் வரவுள்ளதால் இப்படத்திலும் அரசியல் வசனங்கள் இருப்பதாக எண்ணி படத்தை ரிலீஸ் செய்வதில் குறுக்கீடு வரலாம் என்று விஜய் தரப்பு எண்ணுகிறதாம். இதுபோன்ற சிக்கலை தவிர்க்கவே பட ரிலீஸை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைக்க கேட்கப்படுகிறதாம்.