fbpx
Connect with us

Cinemapettai

தெறி’ படத்தில் மொத்தம் இத்தனை சண்டைக்காட்சிகளா?

News | செய்திகள்

தெறி’ படத்தில் மொத்தம் இத்தனை சண்டைக்காட்சிகளா?

theri-hd-stills (8)இளையதளபதி விஜய்யின் ‘தெறி’ திரைப்படம் ஆக்சன் பிரியர்களுக்கு ஒரு விருந்தாக இருக்கும் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. இந்த படம் ஒரு போலீஸ் கதை என்பதால் ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது என ஏற்கனவே செய்தி வெளிவந்த நிலையில் இந்த படத்தில் மொத்தம் ஏழு சண்டைக்காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் வழக்கமான ஹீரோயிசத்தை வெளிப்படுத்தும் பறந்து பறந்து அடிப்பது, கயிற்றை கட்டிக்கொண்டு பறப்பது போன்ற காட்சிகள் இல்லாமல் ரியல் ஹீரோயிசத்தை டூப் இல்லாமல் விஜய் வெளிப்படுத்தியுள்ளதாகவும், அதற்கு ஸ்டண்ட் இயக்குனர் திலீப் சுப்பராயனின் கடுமையான உழைப்பும் ஒரு காரணம் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் திலீப் சுப்பராயன் அமைத்த அதிரடி சண்டைக்காட்சிகளை சமீபத்தில் பார்த்த விஜய் திருப்தி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அஜித்துக்கு ஒரு ஸ்டண்ட் சில்வா போல் விஜய்க்கு திலீப் சுப்பராயன் அதிரடி சண்டைக்காட்சிகளை அமைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top