விஜய் நடிப்பில் வெளியான தெறி படம் உலகம் முழுவதும் மாஸ் கலெக்ஷனை பெற்றிருந்தது. படத்தின் வெற்றியை தொடர்ந்து, தெறி ஹிந்தியில் ரீமேக்காக இருப்பதாக கூறப்பட்டது.

இந்த ஹிந்தி ரீமேக்கில் விஜய் வேடத்தில் ஷாருக்கான் நடிக்க, ரோஹித் ஷெட்டி இயக்கப்போவதாக தகவல்கள் வந்தது.

இதுகுறித்து அண்மையில் ரோஹித் ஷெட்டியிடம் கேட்டபோது, தான் எந்த படத்தையும் ரீமேக் செய்யவில்லை. ஷாருக்கானுடன் இப்போதைக்கு எந்த படமும் இல்லை, வெறும் வதந்திகளே என்று கூறியுள்ளார்.