தெறி படத்தை மலையாளத்தில் வாங்கிய விநியோகஸ்தர் கொந்தளிப்பு
வரிசையாக மலையாள சினிமாவில் படங்கள் வெளியான அடுத்த நாளே இணையதளத்தில் இருப்பது நாம் பார்த்து வருகிறோம்.
முதலில் பிரேமம், இப்போது பிஜு மேனன் நடித்த லீலா.லீலா படத்தை தயாரித்த ரஞ்சித்தும், பிரேமம் படத்தை தயாரித்த அன்வர் ரஷிதும் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் விநியோகஸ்தர் சங்கத்திற்கு எதிரான கருத்துக்களை கொண்டவர்கள் என்பதால் சந்தேகத்துக்கு உட்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தயாரிப்பாளர், நடிகர் விஜய்பாபு, நாங்கள் கஷ்டப்பட்டு காசை கொட்டி எடுக்கிறோம், ஆனால் இதுபோன்ற சதிகாரர்கள் எங்களது உழைப்பை கொள்ளையடிக்கிறார்கள். இதுபோன்றவர்களை கண்டுபிடித்து தூக்கில் போட வேண்டும் என்று கொந்தளித்துள்ளார்.
இவர் தமிழில் இருந்து வாங்கி மலையாளத்தில் வெளியிட்ட விஜய்யின் தெறி படம் கூட இணையதளத்தில் வெளியானதால் நஷ்டத்தை சந்தித்துள்ளாராம்.
