vivegam

விவேகம் படம் திரைக்கு வந்து இரண்டு வாரங்கள் ஆகின்றது. ஆனால், இப்படம் மிகவும் கலவையான விமர்சனங்களை பெற்றது.விமர்சனங்களால் படம் தோல்வியடையும் என்று எதிர்ப்பார்த்தால் வசூல் வேற லெவலில் தான் உள்ளது.

10 நாள் முடிவில் இப்படம் சென்னையில் மட்டுமே ரூ 8 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாம்.இன்னும் ரூ 2 கோடி வசூல் செய்தால் தெறி சாதனையையும், ரூ 3 கோடி வசூல் செய்தால் கபாலி சாதனையையும் முறியடிக்கும்.

இந்த இரண்டு சாதனைகளையும் முறியடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம், ஆனால், பாகுபலி-2 ரூ 16 கோடி வசூலுடன் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.