Connect with us
boomerang-movie

செங்கல்பட்டு ஏரியாவில் ‘தெறி’ ரிலீஸ் ஆகாதது ஏன்?வெளிவந்த தகவல்கள்

செங்கல்பட்டு ஏரியாவில் ‘தெறி’ ரிலீஸ் ஆகாதது ஏன்?வெளிவந்த தகவல்கள்

vijay-theriஇளையதளபதி விஜய் நடித்த ‘தெறி’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனபோதிலும் செங்கல்பட்டு ஏரியாவின் விநியோகிஸ்தர்கள் மட்டும் ஒருசில நிபந்தனைகள் விதித்ததால் படம் சென்னை புறநகர் திரையரங்குகளிலும், செங்கல்பட்டு ஏரியாவின் திரையரங்குகளிலும் ரிலீஸ் ஆகவில்லை. இதனால் அந்த பகுதியின் ரசிகர்கள் ஆத்திரமடைந்தனர்.

அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு மேல் டிக்கெட் கட்டணம் வசூல் செய்ய முடியாத நிலையில் இருப்பதால் ‘தெறி’ படத்திற்கான விலையை குறைக்க வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் வைத்த நிபந்தனைகளுக்கு தயாரிப்பாளர் தாணு ஒப்புக்கொள்ளாததால் செங்கல்பட்டு ஏரியாவில் இந்த படம் வெளியாகவில்லை.

அனைத்து திரையரங்குகளிலும் கார் பார்க்கிங் ரூ.50 என்றும், பாப்கார்ன் ரூ.50க்கும் என அரசு நிர்ணயித்த விலையை விட அதிகமாக விற்பனை செய்து வரும் நிலையில் டிக்கெட்டை மட்டும் அரசு நிர்ணயித்த விலைக்கு விற்பதாக சொல்வதை ஏற்க முடியாது என்று தாணு தரப்பில் கூறுவதாகவும், இதன் காரணமாக ‘தெறி’ படத்தை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய அவர் முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top