CeNhcawXEAAjCpLதமிழ்ப் புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியான படம் தெறி.இந்தப் படம் உலகெங்கும் 1500 அரங்குகளில் வெளியானது. விஜய்யைப் பொருத்தவரை இந்தப் படத்துக்குதான் அதிகபட்ச அரங்குகள்.

படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முதல் நான்கு தினங்களில் மட்டும் ரு 30 கோடிக்கு மேல் இந்தப் படத்து வசூல் கிடைத்ததாக கூறப்படுகிறது.

சென்னை நகரில் மட்டும் ஒரே நாளில் ரூ 1 கோடியை இந்தப் படம் ஈட்டியதாக தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தெரிவித்தார்

முதல் வார நிலவரப்படி தமிழகம், பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் சேர்த்து இந்தப் படம் ரூ 45 கோடியை வசூலித்துள்ளதாகத் தெரிகிறது.

செங்கல்பட்டு, திருவள்ளூர் ஏரியாக்களில் இப்படம் திரையிடப்படாவிட்டாலும், இப்படத்தின் வசூலில் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஏரியா தியேட்டர்களைப் பொருத்தவரை தெறி வெளியாகாதது அவர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.