Connect with us
Cinemapettai

Cinemapettai

theri-nainika-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தெறி படத்தில் நடித்த மீனா மகள் நைனிகாவா இது? 4 வருடத்தில் நெடு நெடுன்னு வளந்துட்டாங்களே!

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் தெறி. விஜய்யின் புலி பட தோல்விக்குப் பிறகு வெளியாகி பெரிய வசூலை குவித்த திரைப்படம் தெறி.

இந்த படத்தில் தளபதி விஜய்க்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருந்ததோ அதே அளவுக்கு நடிகை மீனாவின் மகள் நைனிகாவுக்கும் வரவேற்பு கிடைத்தது. அவரது சுட்டித்தனமான நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

அதன்பிறகு நைனிகா, அரவிந்த்சாமியுடன் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்திலும் பேபி நைனிகாவின் கதாபாத்திரம் பேசும் படி அமைந்தது.

தளபதி விஜய்யின் மீதுள்ள அன்பால் தளபதி விஜய்யை சந்தித்தே ஆகவேண்டுமென மீனாவிடம் அடம் பிடித்து விஜய்யை பிகில் படப்பிடிப்பில் சந்தித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த புகைப்படங்களை மீனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.

அந்த புகைப்படங்களில் கூட நைனிகா இவ்வளவு பெரிய பெண்ணாக வளரவில்லை. ஆனால் சமீபத்தில் மீனா தனது மகள் நைனிகா உடன் வெளியிட்டிருந்த புகைப்படத்தில் நைனிகா நெடு நெடுவென வளர்ந்திருந்த தோற்றம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. வெறும் நான்கே வருடத்தில் இவ்வளவு உயரம் வளர்ந்து விட்டாரே என ஆச்சரியப்படுகின்றனர்.

theri-nainika-cinemapettai

theri-nainika-cinemapettai

தற்போதைக்கு சினிமாவில் நடிப்பதை கைவிட்டுவிட்டு படிப்பதில் கவனம் செலுத்தி வருகிறாராம் நைனிகா. வருங்காலத்தில் தனது அம்மா மீனா போலவே நைனிகா சினிமாவில் கதாநாயகியாக ஒரு கலக்கு கலக்குவார் என்கிறார்கள் சினிமா வாசிகள்.

Continue Reading
To Top