Theri-Vedhalam-365Days

தல அஜித் நடித்து 2015ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் வேதாளம். இப்படம் அஜித் திரை பயணத்தில் அதிக வசூல் செய்த படம்.

இப்படம் ஒரு வருடம் முடிந்ததையொட்டி தல அஜித் ரசிகர்கள் சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் வேதாளம் 365வது நாளில் கொண்டாடினர்.

365ஆம் நாளன்று வேதாளம் படம் மீண்டும் ரோகிணி திரையரங்கில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ஒரே நாளில் ஐந்து காட்சிகள் திரையிடப்பட்டது.ஐந்து காட்சிகளுமே ஹவுஸ்புல்.முதல் நாள் ரிலீஸ் ஆகும் படம் போல் அஜித் ரசிகர்கள் பிரம்மாண்டமான கொண்டாடினர்.

இதே போல் விஜய்யின் வெற்றி படமான தெறி படத்தை ரோகிணி திரையரங்கில் மீண்டும் திரையிட முடிவு செய்திருந்தனர்.

தெறி படம் 365வது நாளையொட்டி நாளை மறுநாள் தமிழ் புத்தாண்டன்று ரீ ரிலீஸ் ஆகவுள்ளது.இப்படம் ஒரு நாளில் மூன்று காட்சிகள் திரையிடப்படவுள்ளது.

வேதாளம் படத்திற்கு 5 காட்சிகள் திரையிட்ட தியேட்டர் தெறி படத்திற்கு 3 காட்சிகள் மட்டுமே திரையிடுவதால் விஜய் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

Vedhalam-365Show-Theri