fbpx
Connect with us

இந்த ஒரு ஏரியா தவிர உலகம் முழுவதும் விற்பனையான ‘தெறி’!

News | செய்திகள்

இந்த ஒரு ஏரியா தவிர உலகம் முழுவதும் விற்பனையான ‘தெறி’!

theri-vijay-14இளையதளபதி விஜய் நடித்த ‘தெறி’ திரைப்படம் ரிலீஸ் ஆக இன்னும் ஒன்பது நாட்களே உள்ள நிலையில் இந்த படத்தின் தமிழக ஏரியாக்களின் ரிலீஸ் உரிமைகள் 90 சதவிகிதம் முடிந்துவிட்டது.

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, ஒவ்வொரு ஏரியாக்களின் விலையையும் மிக அதிகமாக கூறியதுதான் இந்த படத்தின் ரிலீஸ் உரிமை வியாபாரம் கடைசி வரை நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் திருநெல்வேலி-கன்னியாகுமரி ஏரியாவின் ரிலீஸ் உரிமையை முதலில் மோனிகா செந்தில் நிறுவனம் வாங்குவதாக இருந்தது. ஆனால் திடீரென விலை அதிகம் என்று அவர் பின்வாங்கியதால் தற்போது மன்னன் பிலிம்ஸ் நிறுவனம் ‘தெறி’ படத்தின் TK ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளது.

இன்னும் செங்கல்பட்டு ஏரியா ரிலீஸ் உரிமை மட்டுமே விற்பனை ஆகவேண்டிய நிலையில் உள்ளதாகவும், இதைத்தவிர உலகம் முழுவதும் ‘தெறி’ படத்தின் வியாபாரம் முற்றிலும் முடிந்துவிட்டதாகவும் படக்குழுவினர் தரப்பில் கூறப்படுகிறது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top