விஜய் நடிப்பில் கடந்த வாரம் வெளியான வெளியான தெறி திரைப்படம் உலகமெங்கும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. விமர்சகர்கள் மத்தியிலும் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

வெளியான முதல் ஆறு நாட்களில் இப்படம் ரூ. 102.4 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வந்தது.

இந்நிலையில் தற்போது இத்தகவலை தயாரிப்பாளர் தாணு, வெளிப்படையாக விளம்பரங்களில் பயன்படுத்தி வருகிறார்.

பொதுவாக எந்தவொரு தயாரிப்பாளரும் இதுபோன்று பட வசூலை வெளிப்படையாக அறிவிக்கமாட்டார்கள்.