விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான தெறி திரைப்படம் உலகமெங்கும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. விமர்சகர்கள் மத்தியிலும் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தமிழகத்தில் மட்டும் இப்படத்துக்கு ரூ. 55 கோடி விநியோகஸ்தர்கள் ஷேர் வந்திருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம். அந்தவகையில் விஜய்யின் கேரியரில் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த படம் இதுதானாம்.